உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




குலப்பட்ட வரலாறு

93

நாயன் - நாயடு - நாயுடு (தெலுங்கு). நாயர், நாய்க்கன், நாயுடு என்னும் பட்டப்பெயர்கள், இடைக்காலப் படைத்தலைவர்க்கு வழங்கினது மட்டுமன்றி, அவர் வழியினர்க்கும் வழிவழி வழங்கி வருதல் காண்க.

இங்ஙனமே, எட்டி என்னும் வணிகர் பட்டப்பெயரும், எட்டுதல் = உயர்தல், எட்டு எட்டம் = உயரம், உயர்வு, எட்டி = உயர்ந்தவன், வணிகருட் சிறந்தோன்.

எட்டி என்பது, கழகக் காலத்தில் மூவேந்தரும் வணிகர் தலைவனுக்கு அளித்துவந்த சிறப்புப் பெயர். அது இக்காலத்து அரசர், நாண்மங்கல விழாவில், அறிவாற்றல் பொதுநலத்தொண்டு அருமறச் செயல் முதலியவற்றிற்கு அளித்துவரும் சிறப்புப் பெயர்கள் (Birthday Honours) போன்றது.

எட்டி - செட்டி. ஒ.நோ : ஏண் - சேண்.

வடநாட்டுப் பிராகிருத மொழிகளில் எகரக் குறிலின்மையால், அவற்றிற் செட்டி என்பது சேட்டி என நீளும். அது இன்று சேட் எனக் கடை குறைந்து வழங்குகின்றது. செட்டி என்பது சிரேஷ்டி என்னும் வடசொல்லின் திரிபன்று.

"இப்பர் பரதர் வைசியர் கவிப்பர்

எட்டியர் இளங்கோக்கள் ஏர்த்தொழிலர் பசுக்காவலர்

ஒப்பில் நாயகர் வினைஞர் வணிகரென்

றத்தகு சிலேட்டிகள் செட்டிகள் பெயரே'

என்பது திவாகர நிகண்டு.

"நாய்கர் எட்டியர் வணிகர் பரதர் தாமும் பிறவும் தனவைசி யர்க்கே'

என்பது பிங்கல நிகண்டு.

நாய்கர் என்பது வணிகரைக் குறிப்பின், நாவிகர் என்பதன் மரூஉ. கடைக்கழகக் காலத்திலேயே, நிலவாணிகத் தலைவனுக்குச் சாத்தன், சாத்தவன், சாத்துவன், சாத்துவான் என்றும்; நீர்வாணிகத் தலைவனுக்கு நாவிகன், நாய்கன் என்றும் சிறப்புப் பெயர்கள் வழங்கின. அதனால், கோவலன் தந்தை மாசாத்துவான் என்றும், கண்ணகி தந்தை மாநாய்கன் என்றும், பெயர் பெற்றிருந்தனர்.

சார்த்து - சாத்து = காளை கோவேறு கழுதை, குதிரைகளின் மீது பொதியேற்றிச் செல்லும் நிலவணிகக் கூட்டம்,

நாவு - நாவாய் - கடல்நீரைக் கொழித்துச் செல்லும் கப்பல்.

நாவு - நாவி - நாவிகன் = கப்பற்காரன், கடல் வாணிகன்.

ஆதிரை கணவனான சாதுவனும், நீர்வாணிகம் செய்தவனேனும், பெற்றோரா லிடப்பட்ட நிலவாணிகன் பெயரைத் தாங்கினவனா யிருந்திருக்கலாம். சாத்துவன் - சாதுவன்.