உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




குலப்பட்ட வரலாறு

95

வேண்டுமென்னுங் குறிக்கோள் கொண்ட பேராயக் கட்சியினரும், அக் கட்சியைச் சேர்ந்த மாநில அமைச்சரும், நடுவண் அரசு மந்திரிமாரும் கூட, தமக்கு வழங்கி வருகின்றனர். இதனால், மூதிந்தியர்க்கு, சிறப்பாகத் தமிழர்க்கு மூவகைக் கேடுகள் நேர்கின்றன.

(1) குமுகாயத் தாழ்வு

ஆரியச் சார்பான பிறவிக் குலக் குமுகாய ஏணிப்படிகளுள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு குலத்திற்கு நிலையாக ஒதுக்கப்பட்டிருப்பதால், தமிழர் அல்லது திரவிடர் அல்லது பழங்குடி மக்கள் வாழ்நாள் முழுதும் எத்துணை முன்னேற்ற முயற்சி செய்யினும், அவ் வேணியின் உச்சப்படியை அல்லது தமக்கு மேற்பட்ட படியை அடைய முடியாது. ஒவ்வொரு பட்டமும் ஒவ்வொரு குலத்தின் முத்திரையாயிருப்பதால், அப் பட்டத்தைத் தாங்கிக்கொண்டே மேலெழுவது. ஒருவன் தன் பாதத்திற் பாறாங்கல்லைக் கட்டிக்கொண்டு உயரக் குதிப்பது போன்றாகும்.

(2) ஒற்றுமைக் குலைவு

ஒரு வகுப்பார் சேர்ந்து வாழ்வதே சிறந்த வலிமை. ஒற்றுமை யின்றேல் உரங்குன்றிப் போவதால், இன முன்னேற்றத்திற்கு எட்டுணையும் இடமில்லை. ஆகவே, உலகுள்ள அளவும் அஃறிணை போன்றே நின்ற நிலையில் நிற்றல் வேண்டும்.

(3) பகுத்தறிவு வளர்ச்சியின்மை

ஒருவன் தன் இயற்பெயரோடு ஒரு பிறவிக்குலப் பட்டப் பெயரை ணைத்துக் கூறுவது தான் மேற்கொண்டுள்ள தொழிலுக்குச் சற்றும் பொருந்தாததும், வேறெந் நாட்டிலும் இல்லாததும், பகுத்தறிவிற்கு ஒவ்வாததும், முனனோர் மரபிற்கு முற்றும் முரணானதும், எவ்வகை நற்பயனுமற்றதும், நுண்ணறிவு வளர்ச்சிக்குத் தடையானதுமாய் இருத்தலால், அதை அறவே விட்டுவிடுவதே உயர்திணை யொழுக்கத்திற் கும் தமிழன் தலைமைக்கும் தக்கதாம்.

மேலும், இற்றைத் தலைமை மந்திரினியாரின் இருபான்வகைப் பொருளியல் வளர்ச்சித் திட்டத்திற்கும், பிறவிக்குலப் பட்டப்பெயர் வழக்கு பெரு முட்டுக்கட்டை யென்பதை, உணர்தல் வேண்டும்.

- "தென்மொழி" மேழம் 1976