உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கல்வி

97

கல்லல், தோண்டல், உழுதல் என்பன ஒருவினை குறித்தலின் பொருட் கிளவி. ஆகவே, கல்வி என்பது முதன்முதல் உழவு குறித்த கிளவியே யென்பது பெற்றாம். உழவிற்குப் பின் கற்கப்பட்டது கைத் தொழில். கைத்தொழிற்குப் பின்னது கலையறிவு அல்லது நூற்கல்வி. ஆகவே, தொழிற்கல்வி, நூற்கல்வி யெனக் கல்வி இருவகைத்தாயிற்று. உழவும் கைத்தொழிலும் தொழிற்கல்வி, கலையறிவு நூற்கல்வி. இவ் விரண்டனுட் டலைமையும் இன்றியமையாமையும்பற்றி நூற்கல்வியே கல்வியென விதந்தோதப்பட்டது.

வடநூன்முறையில் வழங்கும் அறுபானாற் றொழில்களும் தொழிற் கல்வியாகும்; ஏனை நான்மறை யறுகலைகள் நூற்கல்வியாகும்.

இருவகைக் கல்வியிலும் எந்நூலையும் மறை யென்பது பண்டை வழக்கு. இசைநூலை 'நரம்பின் மறை' என்றார் தொல்காப்பியர். மருத்து நூலை ஆயுர்வேதமென்பர் வடமொழியாளர். கண்கருவியாகக் கைகற்கும் தொழிற்கல்வியும் சிறுபான்மை நுண்மாண் நுழைபுலத்தை நூல்வாயிலா யுணர்த்து மென்க.

ஒவ்வொரு நூலும் ஒருசார் மறைபொருளை யுடைமையின் மறையெனப்பட்டது. இனி, எல்லா நூல்கட்கும் முடிபு வீடுபேறு கூறும் கடவுண்மறையாதலின், அம் மறையுணர்ச்சிக்கு ஒருசார் கருவியாகும் பிற நூல்களும் அவ் வியைபானே மறையெனப்பட்டன வென்னலு மொன்று.

நூற்கல்வியும் உலகநூல், அறிவுநூல் என இருவகைத்தாம். அறிவுநூல் வீட்டுநூலெனவும் படும். கடவுள்வழிபாடும் வீடுபேறும் கூறும் மறையாகமக் கதைகளும், இலக்கண தருக்க தத்துவ நூல்களும் வீட்டு நூல்களாகும். உலக வாழ்க்கைக்குரிய வெல்லாம் உலக நூல்களாகும். ஆன்மவுணர்ச்சி சிறந்தகாலத்து வீட்டுநூலே நூலெனப்பட்டது. விலக்கியங்களெல்லாம் வீடுபேற்றிற்கே வழிகாட்டுவன.

66

66

அறம்பொரு ளின்பம் வீடடைத னூற்பயனே

தொலைவில்லாச்

சத்தமுஞ் சோதிடமு மென்றாங் கிவைபிதற்றும்

பித்தரிற் பேதையா ரில்"

'அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லா

துலகநூ லோதுவ தெல்லாங் - கலகல

கூஉந் துணையல்லாற் கொண்டு தடுமாற்றம்

போஒந் துணையறிவா ரில்

என்றார் பெரியோர்.

தமிழிலக்கண

இக்காலத்துக் கற்கப்படும் ஆங்கிலக் கல்வி தமிழ்முறைப்படி உலக

நூலின் பாற்படுவதே.