உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




98

பண்பாட்டுக் கட்டுரைகள்

எழுத்தறியும்போதே அரி ஓம் நம: என்று தொடங்குவதும், எழுத்துகளே மந்திரவடிவாயிருப்பதும், எழுத்துக்கூட்டி வாசிக்கப் புகு மாத்திரையே “அறஞ்செய விரும்பு”, “ஆலயந் தொழுவது சாலவு நன்று” என்பன போன்ற அறவுரைகளை அறிவிப்பதும், இலக்கண முழுமையும் மெய்யுணர்ச்சி யிலகுவதும், இலக்கியமெல்லாம் வீடுபேற்றை யிலக்காக் கொள்வதும் தமிழுக்கே சிறந்த தகைமைகளாம்.

ஆகவே, கல்வியென்னுங் குறியீடு தமிழில் முதன்முதல் உழவிற் கியற்பெயரா யிருந்து, பின்னர்க் கைத்தொழிற்கும் நூற்கல்விக்கும் இன விலக்கணமாய் இறுதியில்... நூலுக்கே சிறப்பாக வரையறுக்கப் பட்டதென்க.

நிலத்தைக் கல்லுவதினால், ஆழத்தின் மறைந்திருக்கும் கனி (Mine)யுந் தாவரமுமாகிய இருவகை விளைபொருள்களு மாராயப்படும்; விதைகளினின்றுங் கிளர்ந்தெழும் பயிர்பச்சைகளும் வளர்ச்சியடையும்; காய்கதிர்களும் முற்றி மக்கட்கு நுகர்ச்சியுண்டாகும். அதுபோலக் கல்வியினாலும் ஐம்பூதப் பகுதியான எல்லாப் பொருள்களு மாராயப்படும்; மனத்தின் ஆற்றல்களும் வளர்ச்சியடையும், (cf. educate - to draw out the powers of mind); ஆன்ம நுகர்ச்சியாகிய வீடுபேறும் சித்திக்கும்.

கல்வியென்னுந் தமிழ்ச்சொற்குச் சமமான ஆங்கிலச்சொல் Culture என்பதாகும். அது கல் என்னும் பகுதியடியாய்ப் பிறந்த வினைப்பெயரே. கல்வி என்பதில் வி விகுதி; Culture என்பதில் தரம் (ture) விகுதி. கல்வி யென்னுஞ் சொற்குறிக்கும் பொருள்களையே culture என்பதுங் குறிக்கின்றது. அவையாவன:

1. Culture-n. Cultivation

L. colo - to till. கல் = தோண்டு, உழு, பயிரிடு.

இஃதன்றி ஆங்கிலத்தில் உழவு குறிக்கும் ஏனைச் சொற்களில் இன்றியமையாத சிலவும் தமிழேயாத லறியப்படும்.

தொள் - till; தொள் -தொடு தோண்டு. தொள்ளல் = தோண்டல் அல்லது உழுதல்.

ஏர் - n. E. ear, L. aro, Gk. aroo. adj. E. arable.

அகரம் - n. E. acre, Gk. agros, L. ager, a field.

அகரம் மருதநிலத்தூர்

காறு (கொழு) - share.

சூடாமணி நிகண்டு. மருதம் = வயல்.

Culture என்னுஞ் சொல் கல்வியாலான ஒழுக்கத்தை அல்லது திருத்தத்தை உணர்த்திய பின்னர், உழவு ஆங்கிலத்தில் agriculture என அடைகொடுக்கப்பட்டது.