உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கல்வி

2. Culture-n. refinement

99

கல்வியா லறிவும் அறிவா லொழுக்கமும் பயனாதலின் கல்வி யென்பது காரணவாகுபெயராய்த் திருத்தத்தையுங் குறிக்குமென்க.

கல்வித் தொடர்பான சொற்கள்

கழகம் - college, n. (orig.) any collection or community of men with certain privileges or a common pursuit as a college of heralds or the college of cardinals: a seminary of learning; a literary, political, or religious institution. Chambers Etymological

Dictionary

N.B. orig. 'g' was pronounced as 'g' in god and the final ‘e’ was not silent.

கல் +அகம்

=

கல்லகம் - கழகம்.

கல்லகம் வினைத்தொகை.

Pedagogue - n. a teacher.

L. - Gk. paidos (பைதல்), a boy; ago - (உகை) to lead. pedantry - n. vain display of learning (same)

Cyclopedia - n. the circle of human knowledge.

Gk. kyklos(சக்கரம்), a circle; paideia (from the root-படி) learning.

3. Cult - n. worship

L. colo - to worship.

"கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன் நற்றா டொழாஅ ரெனின்.”

(குறள். 2)

இதுகாறுங் கூறியவற்றால் உழவே உலக முதற்கல்வி யென்றும் கல்வி யென்னுஞ் சொல் முதன்முதல் உழவு குறித்த சொல்லேயென்றும், பிற்காலத்து நூற்கல்வியை வரையறுத்தமையின் உழவுப்பொருளில் வழக்கற்றதென்றும், உலகில் முதன்முதல் நாகரிகமெய்தி உழவுங் கல்வியு மறிந்தார் தமிழ்மக்களே யென்றும் அவரானேயே அவ் விருதொழிலும் மேனாடுகளிற் பரவியதென்றும், இவ் விருதொழிலையுங் குறிக்கும் மேனாட்டுச் சொற்களில் இன்றியமையாத வெல்லாம் செந்தமிழ்த் திரிபே யென்றும் தெற்றெனத் தெரிந்துகொள்க.

"செந்தமிழ்ச் செல்வி" சுறவம் 1933