உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




14 நாகரிகம்

'நாகரிகம்' என்னும் சொல்லுக்குத் 'திருந்திய வாழ்க்கை' என்பது பொருள். அறிவும் அதன் வழிப்பட்ட ஒழுக்கமும் சேர்ந்து திருந்திய வாழ்க்கையாகும். ஒழுக்கமின்றி அறிவுமட்டு மிருப்பின் அது நாகரிக மாகாது அநாகரிகத்தின் பாற்படுவதேயாகும்.

அறிவென்பது ஒழுக்கத்திற்குக் காரணமாய் இயற்கையாகவும் செயற்கையாகவும் இருவகையா யிருப்பது. அவற்றுள் இயற்கையாவது குடிப்பிறப்பாலும் தெய்வத்தாலும் உண்டாவது; செயற்கையாவது கல்வியாலும் நல்லினத்தாலும் உண்டாவது.

ஒழுக்கமென்பது அகம் புறமென்னும் இருவகைத் தூய்மை. அவற்றுள் அகத்தூய்மையாவது நினைவு சொல் செயலென்னும் முக்கருமங்களும் தூயவாயிருத்தல். புறத்தூய்மையாவது உடம்பு, உடை, உணவு, காற்று, வீடு முதலியன தூயவாயிருத்தல்.

புறத்தூய்மையினும் அகத்தூய்மையே நாகரிகத்திற்குச் சிறந்ததாக எண்ணப்படும். ஞானத்தாலும் ஒழுக்கத்தாலும் இல்லறத்தினும், பன்மாண் சிறந்த துறவறத்தில் புறத்தூய்மை ஒரு பொருளாகக் கொள்ளப்படுவதன்று. இல்லறத்தினும் ஒருவன் எத்துணை எளியனா யிருப்பினும், தன்னையும் தன் பொருள்களையும் தூயவாய் வைத்துக்கொள்வதே புறத்தூய்மை யாகும். அழகியனவும் விலை யுயர்ந்தனவுமாகிய உடைகளால் உடம்பைப் பொதிவதும், விலையும் சுவையுமிக்க உண்டிகளைப் பன்முறையுண்பதும், மேனிலையும் அகலிடமுமுள்ள மாளிகைகளில் வாழ்வதும், வசதியும் விலை யுயர்ந்தனவுமான வாகனங்களில் ஊர்வதும், இயந்திரத்தாலும் ஏவலாளராலும் வினைசெய்வதும், இன்னும் இவைபோல்வன பிறவும் (அறிஞர்களும் அறிவிலிகளுமான) செல்வர்க்கே யுரிய ஆடம்பர வாழ்க்கையன்றி நாகரிக வாழ்க்கை யாகா. இவற்றை நாகரிகமென் றெண்ணுவது மேலைப் புதுநாகரிகம்பற்றிய திரிபுணர்ச்சியாகும்.

"கந்தை யானாலும் கசக்கிக் கட்டு"வதும்

ee

'கூழா னாலுங் குளித்துக் குடி"ப்பதும்

குடிலா னாலுங் கூட்டிக் குடியிரு"த்தலுமே

தமிழ்நாட்டுத் தலைநாகரிகமாகும். கூட்டலாவது மயலகற்றல்.