உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நாகரிகம்

103

ஆங்கிலத்திலும் நாகரிகத்தைக் குறிக்கும் civilisation என்னும் சொல் தே காரணத்தாற்றான் உண்டாயிருக்கின்றது. Civitas என்பது, இலத்தீன்(Latin) மொழியில் நகர் அல்லது பட்டினம் (city) என்று பொருள் படும். அதிலிருந்தே civilise என்னும் வினை யுண்டாகும். மரியாதையை அல்லது திருந்திய ஒழுக்கத்தை உணர்த்தும் civility என்னும் சொல்லும் அதனின்றும் திரிந்ததே.

civil: having the refinement of city-bred people.

civil war: a war between citizens of the same state.

city: a large town. L. civitas

(Chamber's Etymological Dictionary)

நாகரிகமென்னும் சொல் நாகர் என்னும் பெயரினின்று வந்ததென்றும், நாகரென்பார் நாகரிகத்திற் சிறந்திருந்தவரென்றும் ஆயிரத் தெண்ணூ றாட்டைமுற் றமிழர் (The Tamils 1800 Years Ago) என்னும் நூலிற் கூறப்பட்டுள்ளது.

நாகரென்பார் நாகநாடெனப்பட்ட கீழ்த்திசை நாடுகளில் நாக வணக்கம் கொண்டிருந்த மக்கள் வகுப்பாரே. நாகவணக்க முடைமைபற்றி நாகரெனப்பட்டார். நாகருடைய நாடு நாகநாடெனப்பட்டது.

நாகம் என்பதும் நாகர் என்பதும் பாம்பின் பெயர்கள். நகர்வது நாகர். அது முதனிலை திரிந்த தொழிலாகு பெயர்; நாகர் என்பது நாகம் என மருவும். ஆங்கிலத்திலும் snake என்பது இதே பொருள் பற்றியது.

snake: a creeping animal; snican, to creep -

(Chambers' Etymological Dictionary).

நகர் நாகம் என்னும் தமிழ்ச்சொற்களே 's' என்னும் முதல் எழுத்துப் பெற்று ஆங்கிலத்தில் வழங்கு மென்க. அது முதற்குறைக்கு மாறானதோர் முதல் விரிபாகும். அதை ஆங்கிலத்தில் 'prosthesis' என்பர்.

நாகம் என்னும் சொல்லுக்கு மலையிலுள்ள தென்றும் மரத்திலுள்ள தென்றும் வடநூலார் பொருள் கூறுவது சிறிதும் பொருந்தாது.

கீழ்த்திசை நாடுகளில் பெரும்பாம்புகளிருந்தனவாக வான்மீகி இராமாயணக் கிட்கிந்தா காண்டத்தா லறியக்கிடக்கின்றது. இற்றைக்கும் கழிபெரு நச்சுப் பாம்புகள் தென்அமெரிக்காக் கண்டத்தி லுள்ளனவாகச் சொல்லப்படும். நாகத்தின் தீமைபற்றி அதைத் தெய்வமாக மக்கள் வணங்கி வந்தனர் என்க.

நாகத்தொடு பெயரொப்புமைபற்றி நாகரை நாகத்தலையும் மக (மாநுட)வுடம்பும் பெற்ற ஒருவகை உயர்திணை வகுப்பாராகப் பிறழக் கருதுவர் சிலர்.