உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




104

பண்பாட்டுக் கட்டுரைகள்

பர்மா, ஜாவா முதலிய தீவுகளும், ஆத்திரேலியா, அமெரிக்கா வென்னும் கண்டங்களும், வங்காளக் குடாக்கடலில் அமிழ்ந்து போன நிலப்பாகங்களும் நாகநாடுகளாகும்.

மணிமேகலையில்,

“கீழ்நில மருங்கி னாகநா டாளும்

"நாகநன் னாட்டு நானூறி யோசனை வியன்பா தலத்து வீழ்ந்துகே டெய்தும்’

66

"நாக நாடு நடுக்கின் றாள்பலன்

வாகை வேலோன் வளைவணன்

""

(கம்பரா. சுந்தர. 20)

எனக் கீழ்த்திசை நாடுகள் பொதுவாகவும் சிறப்பாகவும் நாகநாடெனச் சுட்டப்பட்டன.

சாவக நாட்டுள்ள புண்ணியராசன் தலைநகர் நாகபுரமெனக் கூறப்பட்டுள்ளது.

கம்பராமாயணச் சுந்தரகாண்டத்தில்,

“கீண்டது வேலை நன்னீர் கீழுறக் கிடந்த நாகர்

வேண்டிய வுலக மெங்கும் வெளிப்பட மணிகண் மின்ன ஆண்டகை யதனை நோக்கி யரவினுக் கரசர் வாழ்வும்

99

காண்டகு தவத்த னானேன் யானெனக் கருத்துட் கொண்டான்' என்னும் செய்யுளில் நாகநாடு குறிக்கப்பட்டுள்ளது. இதில் கீழென்பது கிழக்கு. இதைக் கடலின் அடிப்பாகமெனக் கொண்டு இடர்ப்படுவர் சிலர்.

அனுமான் கடலைத் தாவின வேகத்தினால் எழுந்த காற்று மோதுதலினாலே, கீழ்த்திசையில் பூமியின் வளைவான பாகத்திலுள்ள கடல்நீர் விலகி, அதனால் முன்னம் மறைக்கப்பட்டு (அதற்கப்பால் கிழக்கே) இருந்த நிலப்பாகம் அல்லது நாகநாடு தோன்றிற்று என்பது இச் செய்யுளின் கருத்தாகும்.

பூமி உருண்டையா யிருத்தலால் கிழக்கே செல்லச்செல்லப் பூமியின் கீழ்ப்பாகமாகும் அமெரிக்கா பூமிக்கு நேர் கீழாகும்; அதனால் கீழ்ப்பூமி யெனப்படும். அது பூமியின் மேற்பரப்பின் வழியாய்ச் சென்றெய்தப்படு வதல்லது நிலத்தை யகழ்ந்தும் கடலின் மூழ்கியும் நேர் கீழாகச் சென்றெய்தப்படுவதன்று. மேற்கே மலைத்தொட ரிருந்தமையால் தமிழ்மக்கள் மேற்றிசையிற் பெரும்பாலும் சென்றிலர். கிழக்கே மலையின்றி யிருந்ததுடன் நிலத்தொடர்பும் நெடுந்தூர மிருந்ததாகத் தெரிகின்றது.

நாகநாட்டை யடுத்த கீழ்கரையூர்கள் நாகூர், நாகப்பட்டினமெனப் பெயர்பெற்றிருக்கின்றன.

நாகரில் நாகரிகரும் அநாகரிகருமாக இருவகுப்பார் இருந்திருக் கின்றனர். நாகரிக வகுப்பைச் சேர்ந்த கன்னிகைகளையே அர்ச்சுனனும் சோழனும் மணந்ததாகப் பாரதமும் மணிமேகலையுங் கூறும்.