உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




15

வெடிமருந்து

வெடிமருந்தாவது வெடிக்கின்ற மருந்து அல்லது சரக்கு.வேட்டு, வெடி என்பன ஒருபொருட் கிளவி. அவை விள் என்னும் மூலத்தினின்றும் வெடிக்கின்ற ஒலிபற்றிப் பிறந்து திரிந்த பழஞ் செந்தமிழ்ச் சொற்கள். வெடிமருந்துகள் பெரும்பாலுங் கலவைகளா யிருக்கும். அக் கலவைகளில் ஒன்று கருமருந்து (gun powder) என்பது.

துபோது போர்க்குண்டுகள் எத்துணையோ புதுமாதிரியாய்ச் செயப்படினும் அவை யெல்லாவற்றுக்கும் மூலம் கருமருந்தே யென்பது எவர்க்குந் தெரிந்திருக்கும். கந்தகம் கரி வெடியுப்பு என்ற மூன்றன் கலவையே கருமருந்தாகும். இம் மூன்றும் இந்துமாநாட்டில் தொன்று தொட்டுக் கிடைக்கின்றன. கரிய நிறத்தானும் மருந்துபோலுந் தோற்றத் தானும் மருந்துச் சரக்காகிய கந்தகத்தின் சேர்க்கையானும் கருமருந் தெனப்பட்டது.

கருமருந்தின் பிறப்பிடத்தைப்பற்றி Encyclopaedia Britannica என்னும் ஆங்கிலக் கலையகராதி(Ninth Edition Vol. XI p. 317), பின்வருமாறு கூறுகின்றது:

"கருமருந்தின் கீழைப்பிறப்பு

எல்லா அதிகாரிகளின் ஆராய்ச்சி

யும் கீழ்நாட்டையே கருமருந்து போன்ற ஒரு வெடிகலவையின் பிறப்பிட மாகச் சுட்டுவதாகத் தெரிகின்றது. அது அங்குத் தொன்றுதொட்டு வழங்கி வந்தது. ஆனால், அதைக் குண்டாக உபயோகித்த காலம் மிகப் பிந்திய தென்பதற்கு ஏதும் ஐயமின்று. இந்திய சீனப் பெரு மைதானங்களில் ஏராளமாய் மண்ணோடு மண்ணாய்க் கலந்துள்ள வெடியுப்பின் சிறப் பியல்கள் தற்செயலாய்க் கண்டு பிடிக்கப்பட்டதே வெடிமருத்துவக் கலைக்குத் தொடக்கமா யிருந்திருக்கக்கூடும். அடுப்பெரிக்கும் விறகு கரியினால் கருமருந்திற் சேரும் சரக்குகளில் வேகமிக்க இரண்டும் எளிதாய்க் கலப்பாகும். பின்பு நெருப்பின் தொழிலால் அவை விளக்கமா யேனும் மங்கலாயேனும் விரைந்தெரியும். வெடியுப்புச் சில வேளைகளில் நிலக்கரியில் விழுந்துவிடுவதால் வியக்கத்தக்க விதமாய் அதை மிதமிஞ்சி எரியப் பண்ணுகின்றது. ஆகையால் வெடியுப்பும் கரியும் சேர்ந்த கலவையே யாதானுமொரு வேகத்துடன் வெடிக்கு மென்பதை யாம்