உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




114

பண்பாட்டுக் கட்டுரைகள் ஏற்படுத்தப்பட்டவை. இதனால் அதிலிருந்து அவன் பெயரால் ஒரு சகாப்த மும்(Era) வழங்கலாயிற்று.

சிலர் சாலிவாகனனுக்கு அறுபது மக்களிருந்தனர் என்றும், அவர்கள் பெயரையே ஆண்டுகளுக்கு இட்டனன் என்றும் கூறுவது நம்பத்தக்கதன்று.

அறுபதாண்டுகளின் பெயர்கள் யாவும் இடுகுறியான வடசொற்கள். அவை வடமொழியாயிருப்பதுபற்றி அக்கால அளவு ஆரியரதாகாது. பொருள் வேறு, சொல் வேறு. பல நாட்டு நகரங்கட்கும் தமிழ்மக்களுக்கும் க்காலத்து வடமொழிப் பெயர்கள் வழங்குதல் காண்க. அறுபதாண் டென்னுமளவு ஒருவர் ஆயுட்காலத்திலேயே முடிந்துவிடுவதினாலும், அது திரும்பத் திரும்ப நிகழ்வதால் ஓர் ஆண்டின் பெயர் ஆங்கில ஆண்டின் எண்ணைப் போல ஓர் ஆண்டையே குறியாமல் முன்பின் பல ஆண்டு களைக் குறிப்பதாலும், அதன் பெயரீடு எத்துணையும் சிறந்ததன்று. அதனாலேயே தமிழர் அவ் வாண்டுகட்குப் பெயரிட்டிலர். ஆண்டுகளின் பெயர்களை அறியாமலே ஒருவர் தம் ஆயுளைச் சொல்லக்கூடும்.

க்

மக்களின் சராசரி ஆயுளெல்லை ஆதியில் பன்னூறாகவும், பின்பு வேத காலத்தில் 100 ஆகவும், சாலோமோன் காலத்தில் 80 ஆகவுமிருந்து இன்று 60 ஆகக் குறைந்துள்ளது. அறுபதாண்டானவுடன் 'சஷ்டி பூர்த்தி’ என்னும் அறுபதாண்டு விழாவைக் கொண்டாடுகின்றனர். பெருமக்கள் அறுபதாண்டிற்கு மேற்பட்ட காலம் சராசரி ஆயுட்கு மிஞ்சினதாக எண்ணப் படுகின்றது. ஆயினும், 60 ஆண்டிற்கு மேற்பட்டோர் மிகப் பலரிருக் கின்றனர். இக்காலத்திலேயே அறுபதாண்டிற்கு மேற்பட்டோரிருக்கும் போது, முற்காலத்தில் அத்தகையோர் கழிபலரிருந்தார் என்பதற் கெட்டுணையு மையமின்று. ஆதலால், ஆண்டுகளின் பெயர்களில்லாக் காலும் அறுபதாண்டென்னுங் கணக்கு ஒருவர் நினைவி லிருந்திருக்கக் கூடியதே. ஆகவே, ஒரு பஞ்சத்தில் முடியும் அல்லது முடிவதாக எண்ணப்படும் அறுபதாண்டுக் காலமும் ஓர் அளவாயிற்று.

ஆறாவது, ஊழி. ஊழிகள் கிரேதாயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என நான்கென்றும் அவை முறையே 17,28,000, 12,96,000, 8,64,000, 4,32,000 ஆண்டுகளென்றும் புராணமுறை தழுவிப் பஞ்சாங்கங்கள் கூறாநிற்கும். இவ் வூழியளவுகளின் கழிபெரு நீட்சியையும் இவை முறையே ஒவ்வொன்றிலும் 4,32,000 ஆண்டு குறைந்து வருவதையும் நோக்குமிடத்து, இவை கற்பனை யென்றும், இதுவரை உண்மைச் சரித்திரத்தில் ஒருமுறை யேனும் கணக்கிடப்பட்டில் வென்றும் தெள்ளிதிற் றெரியும். உலகத்தில் எந்த நாட்டிலும் உண்மையான அல்லது நம்பத்தக்க சரித்திரம் கிறித்துவின் காலத்திலிருந்து, அல்லது அதற்குச் சில நூற்றாண்டுகட்கு முன்னிருந்துதான் தொடங்குகிறது. ஆதலால், அதற்கு முற்பட்ட கழிநெடுங்காலக் கணக்கு, சரித்திர முறைபற்றியதன்று.