உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பண்டைத் தமிழர் காலக்கணக்கு முறை

115

ஊழி யென்னுஞ் சொற்பொருளை யாராயின், அச் சொல் குறிக்கும் கால அளவு ஏற்பட்டமைக்குக் காரணம் புலனாகும். ஊழி என்னும் சொல் ஊழ் என்னும் பகுதியடியாய்ப் பிறந்து இகர விகுதி கொண்ட தொழிற் பெயராகும். ஊழ் என்னும் பகுதிக்கு முறைமை, விதி என்னும் பெயர்ப் பொருளும், முதிர்வு அழிவு என்னும் வினைப்பொருளு முள்ளன. இவற்றுள், வினைப்பொருளே பெயர்ப்பொருட்கு மூலமாகும். ஊழ் என்னும் வினைப்பகுதி முதிர்வு அல்லது அழிவு என்னும் பொருளில் சங்க நூல்களிற் பலவிடத்து வந்திருப்பதைக் காணலாம்.

எ-டு :

“தீஞ்சுளைப் பலவின் பழமூழ்க் கும்மே”

'உழுதூர் காளை யூழ்கோ டன்ன

“பழமூழ்த்து’

""

""

ஊழ்கோடு = செவ்வியழிந்த கோடு (சாமிநாதையர் உரை).

(புறம். 109)

(புறம். 322)

(புறம்.381)

66

""

கழைவளர் நெல்லி னரியுழை யூழ்த்து

66

ஊழுற் றலமரு முந்தூழ்

(மலைபடு. 180)

(மலைபடு. 133)

ஊழுறுத்து = வீழ்த்தி

(பெருங்கதை உரை: ப. 264)

“காந்த ளூழ்த்துச் சொரிவபோல்”

(சீவக. 1742)

ஊழ் என்னும் பகுதியடியாய்ப் பிறந்து அல் விகுதி பெற்ற ஊழல் என்னும் தொழிற்பெயர் கேடு என்னும் பொருள் தருவதாகும். சூரியனைக் குறிக்கும் என்று என்னும் பெயர் ஊழ் என்னும் சொல்லொடு புணர்ந்தான என்றூழ் என்னுந் தொடர், அழிவுக்குரிய கோடைகாலத்தையும் வெயிலை யும் அவற்றை யுண்டாக்கும் சூரியனையுங் குறிக்கும்.

மேற்காட்டிய உதாரணங்களினின்று, ஊழ் என்னும் சொல் முதலாவது அழி என்னும் பொருள் தரும் வினைப் பகுதியே யென்பதும், பின்பு முதனிலைத் தொழிற்பெயராயும் இகரவிகுதி பெற்ற தொழிற்பெயராயும் நின்று அதன் பின்பு ஆகுபெயராகி விதி, முறைமை, யுகம் என்னும் பொருள்களைத் தந்தது என்பதும் அறியக் கிடக்கின்றன. ஆக்கமுங் கேடுமாகிய இரண்டும் விதியே யேனும், கேடு அல்லது துன்பம் வந்த விடத்தே விதியென்று இறைவனை யெண்ணுவதும், ஆக்கம் அல்லது இன்பமுள்ளவிடத்து இறைவனை மறந்து மகிழ்ந்திருப்பதும் உலகவியல் பாதலால், அழிவு என்று பொருள்படும் ஊழ், ஊழி என்னுஞ் சொற்கள் மேற்கூறிய விதி முதலிய பொருள்களை முறையே கொள்ளலாயின.

ஒவ்வோர் ஊழியின் இறுதியிலும் ஒவ்வொரு பேரழிவும் ஒவ்வொரு சதுரூழியின் இறுதியிலும் ஒவ்வொரு மாபேரழிவும் நிகழ்வதாகச் சித்தாந்த நூல்கள் கூறும். இவ் வழிவு எரிமலை யெழுச்சியாகவாவது கடல்கோளாக வாவது இருக்கலாம். இவ் விரண்டிற்குங் காரணம் நிலத்தின் உள்நடு