உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




புறநானூறும் மொழியும்

3

கொண்ட பனுவல்களையும் நோக்குமிடத்து, நாலென்னும் எண் ஏதோ வொரு காரணம்பற்றி நூற்செய்யுட் டொகைக்குச் சிறந்ததாகக் கொள்ளப் பட்டதென்பது தெரிகின்றது. அது நால்வகைப் பாவோ நால்வகைக் குலமோ பற்றியிருக்கலாம்.

4. நடை

பண்டைத் தமிழ்நூல்களெல்லாம் தனித்தமிழ் என்னும் பொதுக் கொள்கைக்கேற்ப, புறநானூறும் தனித் தமிழே. ஆங்காங்கு இரண்டொரு வடசொற்கள் அருகி வந்திருப்பதினால், புறநானூற்றின் தனித்தமிழ்த் தன்மை குன்றிவிடாது. இந் நூலில் வந்திருக்கும் வடசொற்களெல்லாம் இருபது அல்லது இருபைத்தைந்தே. இவற்றுள்ளும் ஒருசில தென் சொல்லோ வடசொல்லோ என ஐயுறற்குரியன.

இரண்டொரு வடசொற்கள் இங்குமங்குமாக அருகி வந்திருப்பது கொண்டு, புறநானூறு முழுமையுங் கலப்புத் தமிழென்பாராயின், பிறமொழிச் சொல் கலவாத மொழியே உலகத்திலில்லை யென்றும், ஆரியத்திலும் சுட்டும் வினாவும் மூவிடப் பெயரும் போன்ற அடிப்படைச் சொற்க ளெல்லாம் வேர்நிலையில் தமிழா யிருத்தலின், தமிழ் தனித்து வழங்கினும் ஆரியம் தனித்து வழங்கல் கூடாமை யென்றும் கூறி விடுக்க.

புறநானூற்றுச் செய்யுள்களிற் சில சிதைந்துங் குறைந்து மிருப்பதால், இந் நூற் செய்யுள்களின் அடிச்சிறுமை பெருமையும் சொற்றொகையும் அறிவதற்கில்லை. ஆயினும், இதுபோதுள்ளபடி அடியுஞ் சொல்லும் எண்ணிப் பார்ப்பின், ஒரு செய்யுளின் சராசரி அடித்தொகை பதினெட் டென்பதும், ஓர் அடியின் சராசரிச் சொற்றொகை ஆறென்பதும் தெரிய வரும். ஆகவே, ஒரு செய்யுளின் சராசரிச் சொற்றொகை ஏறத்தாழ நூறென்பது பெறப்படும்.

5.புறநானூற்றால் விளக்கப்படும் சொல்லியல் (Etymological) நெறிமுறைகளும் உண்மைகளும்

1. சுட்டடிச் சொற்கள் முதற்காலத்தில் உயிர் முதல.

எ-டு : ஏம்-ஏமம்-சேமம் = காவல், பாதுகாவல் (1, 3). சேமவச்சு (102). சேமம்-க்ஷேம (வ). ஒ.நோ : ஏண்-சேண்.

(2) சுட்டுவினாச் சொற்கள் முதற்காலத்தில் நெடின் முதல. எ-டு : ஆங்கு = அசை (2), அப்படி (24) : அதுபோல (35, 106). ஈங்கனம் = இவ்வாறு (208), ஈது (208).

ஊங்கு = முன் (79, 88, 141).

ஏனோர் = யாவர் (342), யாங்கனம் = எவ்வாறு (8,49). யாங்கு = எப்படி (191, 245)