உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




புறநானூறும் மொழியும்

5

இந் நூற்பாவிற்குப் பல்கலைக்கழக அகராதிப் பதிப்பாளர், Tolkappiyar says that the origin of words beyond ascertainment" என்று விளக்கங் கூறியிருப்பது மிகமிக இரங்கத்தக்கது.

(8) குமரிநாட்டுச் சொற்கள் பல இறந்துபட்டன. அதனால் வேர் மறைந்த சொற்கள் வேர்ப்பொருள் தாங்கி நில்லா.

(9)

ஒரு பொருட்குப் பலகாரணம்பற்றிப் பல சொல் தோன்றும். எ-டு : கடல் = வளைந்தது, பெரியது; முந்நீர் = மூன்று நீரை யுடையது; யானை = கரியது. கைம்மான் = கையை யுடைய விலங்கு. வேழம் = கரும்பையும் மூங்கிலையும் தின்பது. (கழை மூங்கில் (158), கழைக்கரும்பு (137), கழைதின் யானையார் ஒரு புலவர் (204)).

=

(10) ஒரே காரணம்பற்றிப் பல பொருட்கு அல்லது கருத்துக்குப் பல்வேறு சொல் தோன்றும்.

-டு. : இறு இறங்குதல் = வளைதல் (98), இறைஞ்சுக = வணங்குக

(6).

அம்-அம்பு = வாணம் (வளைவது), ஆம்பி = காளான்.

குள்-குடை = வளைந்த கவிகை, கொடுமை = வளைவு (39). திரி - திரியாச் சுற்றம் (2), திருகி

=

குறுகி (27), திருகி-திகிரி (32), புரி-புரி = முறுக்கு (135), புரிசை = மதில் (17), வள்- வளை, வணர்-வளைவு (455), வணங்கு = வளைந்த (32), முள் - முடம் (307)

(11) ஒரு கருத்தினின்று வேறு கருத்துத் தோன்றும்.

எ-டு : கமழ - பரக்க (50), வீசிய சிதறிய (23),

குறும்பு = சிற்றரண், குறும்பரசர், குறும்பரசர் செய்யும் தீமை.

செம்மை = சிவப்பு, நேர்மை.

(12) பருப்பொருட்

கருத்தினின்று

நுண்பொருட் கருத்தும்,

நுண்பொருட் கருத்தினின்று பருப்பொருட் கருத்துந் தோன்றும்.

எ-டு : அதன் தலை = அதற்கு மேலே (19),

கவலை = கவர்த்த வழி (3), மனக்கவலை.

முள் -முய்-முயல்-மயல்-மால்-மாலை, துல்-துலாம்=ஒப்பு, தராசு (39).

(13) ஒருபொருட் சொற்களினின்று ஒத்த கருத்துத் தோன்றலாம்.