உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6

பண்பாட்டுக் கட்டுரைகள்

எ-டு : : பொரு = பொருந்து, போர் செய்; சமம் - ஒப்பு, போர் (14)

உறு = பொருந்து, உறுவர் = எதிர்ந்தவர் (11),

உறழ்தல் = மாறுபடுதல் (22),

உடல் = உடனிருப்பது. உடலுதல் = பகைத்தல் (25), உடலுநர் = மாறுபடுவோர்,

அகல் = விரி, நீங்கு; படர் = விரி, செல். அசை = இயங்கு. வருந்து ; சலி = அசை, வருந்து, களை.

(14) பொருள் வேறுபடச் சொல் வேறுபடும்.

எ-டு : மண்-மணல். தலையன் - தலைவன், வழிபடு-வழிப்படு. படிய படிக்க. தேய்ந்தான் - தேய்த்தான்.

ஈ-வீ-வீழ்-விழை-விழா-விழவு.

வீழ் - விழு - விழும்- விழுப்பம். விழுமிய = சிறந்த. வீழ் - விழு. வீழ் - வீழ்து - விழுது.

விழு விழல். வீ = விழுந்த மலர். "கான வூகின் கழன்றுகு முதுவீ" (307). “வீ கமழ்" "வீழும்பூ நாறுகின்ற” (36, உரை) விழு-விகு-விகுதி-விக்ருதி (வ.), ஒ. நோ, தொழு-தொகு. வீதல் = விழுதல், முடிதல், இறத்தல்.

-

விகு + தம் = விகுதம் - விகிதம் = விழுக்காடு.

விகுதம் = வீதம்.

வீழ் - வீள் - விள் விரும் விரும்பு.

விரும் விருந்து

=

-

விரும்பியிடும் உணவு, விரும்பி

வேண்டு - வேண்டும் - வேண்டாம்

யூட்டப்படும் புத்தாள், புதுமை,

விள் - வெள் - வெம்மை - வெய்யோன்.

வேள் வேண்

வேண்டா.

வேள் - வேட்டம் - வேட்டை - வேட்டுவன் - வேடுவன் - வேடன் - வேடு,

வேள் - வேட்கை,

வேள் வேள்வி, வேளாண்மை, வேளாளன், வேளான்,

வேள், வேளம்,

வெள்-பெள்-பெண்-பேண்-பேடு, பேடன், பேடி பெள்-பெட்டை-பெடை-பேடை.

பெண்-பெண்டு-பெண்டாட்டி.

விள்-பிள்-பிண்-பிணா-பிணவு-பிணவல்.பிணா-பிணை.

(15) பல்வேறு சொல்திரிந்து ஒருவடிவு கொள்ளலாம்.

வாள் = ஒளி (196). வாள் = வாட்படை (4),

வில்-விள்-வாள் = ஒளி. வாள் = வெண்மை (6) தூய்மை (1).