உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




புறநானூறும் மொழியும்

பால் = வெள்ளமுதம். பல் = வெண்முறுவல். வள் - வாள் = வளைந்த கத்தி.

(16) பொருட்குத் தக ஒலி திரியலாம். கறித்தல் = மெல்லக் கடித்தல்.

7

கடித்தல் = வலுவாய்க் கடித்தல் “மடப்பிணை... வேளை வெண்பூக் கறிக்கும் " (23).

(17) தமிழ் எழுத்துகளுள் றன பிந்தியவை.

ஒளிர் -ஒளிறு. முரி - முறி. வாழும் வாழுமர்-வாழுநர்- வாழ்நர் (9). பொருநன் (58) பொருந (2,17). அடுநை (36). ற ன அரிவரி மெய்வரிசையில் வல்லினத்தோடு சேர்க்கப் படாமல் இறுதியில் வைக்கப்பட்டிருத்தலை நோக்குக.

(18) தொழிற்பெயர் பகுதியாதலுமுண்டு.

-டு : நச்சு + ஐ

நசை, நசை வேட்கை = நச்சிய விருப்பம் (3). (19) கடைக் கழகக் காலத்திலேயே நுண்பொருட் சொற்களைப் பருப்பொருளில் வழங்கத் தொடங்கிவிட்டனர்.

எ-டு : "சிறு துனி" (366). "பெரும வுரைத்திசின்” (167).

(20) சில சொற்களும் சொல் வடிவங்களும் செய்யுளில் அல்லது சில பனுவல்களில் இடம் பெறா.

எ-டு : வண்டி, தூங்கு சொல்

செய்தால், ஆனால் சொல் வடிவம்.

(21) ஒருபொருட் பல சொற்கள் நுண்பொருள் வேறுபாட்டின. எ-டு : கண்ணி = கண் கண்ணாய்ப் பூவைத் தொடுத்துத் தலையிற் சூடும் தொடை (I).

(22)

தார் = மார்பிலணியும் கட்டி மாலை (I) கோதை = பூமாலைப் பொதுப் பெயர் (48). தழைமாலை (271).

தொடலை

=

ஆரம் = முத்துமாலை (19).

மாலை மாலைப் பொதுப்பெயர் (95)

ஒரு பொருட்குத் தகுந்த சொல்லை வழங்க வேண்டும். டு : "ஞாயிறு ... குடகடற் குளிக்கும்” (2).

"அந்தி யந்தணர் அருங்கட னிறுக்கும் " (2)

(23) தமிழ் பெருஞ் சொல்வளத்தது.

கல், அறை, குன்று, குன்றம், பொறை, மலை - மலைப் பெயர்கள்.

சாரல், கவான், சிமை, குவடு கோடு, அடுக்கம் மலைப்பகுதிப் பெயர்கள்.