உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




புறநானூறும் மொழியும்

11

தூய இலக்கிய நடையிலும் சொல்லமைதியும் சொற்றொடரமைப்பும் பெரும்பாலும் ஒத்ததாய், சிறிது கற்றார்க்கும் ஓரளவு விளங்குவதாய் வேர்ப்பொருள் தாங்கிக் கொண்டுள்ளது.

(10) கடைக்கழகத் தமிழ் தனித்தமிழே.

புறநானூற்றிற் சில செய்யுள்களில் இரண்டொரு வடசொற்களே காணப்படுகின்றன. பல செய்யுள்களில் வடசொல்லேயில்லை.

எ-டு : "யாது மூரே," (192)

ஆகையால், நூலின் மொத்தச் சொற்களில் நூற்றுக்கொன்றுகூட வடசொல்லில்லையென்பது தெளிவு.

(11) கடைக் கழகக் காலத்திலேயே வடசொற் களைகள் முளைத்துத் தமிழ்ச்சொற் பயிர்களைக் கெடுக்கத் தொடங்கிவிட்டன.

அஞ்சனம் (மை), ஆயுள் (வாழ்நாள்), ஆவுதி (அவி), இந்திரர் (வேந்தர்), இமயம் (பனிமலை), உதீசி - ஊசி (வடக்கு), எந்திரம் (பொறி, மணை, சூழ்ச்சியம்), கலவம் (பீலி, தோகை) கவுரி (மாயோள், மலைமகள்), சாபம் (வில்), தருமம் (அறம்), தூமம் (நறும்புகை, வால் வெள்ளி, விண்வீழ்கொள்ளி), நிச்சம் (நாளும், என்றும்), நிரயம் (அளறு), நேமி (ஆழி, திகிரி), பங்குனி (உத்தரம்), பஞ்சவர் (ஐவர், பாண்டவர்), பிராசி பாசி (கிழக்கு), யூபம் (கந்து, வேள்வித்தூண்), விசயம் (கொற்றம், வெற்றி) வேதம் (மறை).

இவையே புறநானூற்றில் வந்துள்ள தெளிவான வடசொற்கள். இவை தமிழுக்கு இன்றியமையாதனவோ சிறப்புச் செய்வனவோ அல்ல. இவை, ஆரியர் வடமொழி தேவமொழி யென்றும் சமயமொழி என்றும் ஏமாற்றிய பின், சமையம் வாய்க்கும் போதெல்லாம், தமிழர்க்குத் தெரியாதவாறு, தமிழ்ச் சொற்களை வழக்கு வீழ்த்தும்பொருட்டு ஒவ்வொன்றாய்த் தமிழிற் புகுத்தியவை. இவற்றால் தமிழுக்குப் பலவகையிலும் தீமையேயன்றி நன்மையில்லை. அத் தீமைகளாவன :

(1) தென்சொல் மறைவு

தமிழ்ச்சொற்கட்குப் பதிலாக வடசொற்களை வழங்கவே, முன்னவை முதலாவது வழக்கிறந்தன; பின்னர், பண்டைக் காலத்தில் விரிவான அகராதிகள் தொகுக்கப்படாமையாலும், தொல்காப்பியம் ஒழிந்த தொன்னூல்களெல்லாம் இறந்துபட்டமையாலும், தமிழகத்தின் பெரும் பகுதியான குமரிநாட்டைக் கடல் கொண்டமையாலும், நாளடைவில் மீட்பற மறைந்தொழிந்தன.

(2) தென்சொல் வழக்கழிவு

யாலும்,

ம்

வடசொல் வழக்காலும், அதனால் தமிழர் தமிழுணர்ச்சி யற்றமை

அடர் (கம்பியாகச் செய்), அடுக்கம் (பக்கமலை), அணங்கு (தெய்வப் பெண், மோகினி), அணல் (தாடி), அல்குபதம் (இட்டு வைத்துண்ணும்