உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




12

பண்பாட்டுக் கட்டுரைகள் உணவு), அழுவம் (மேற்பரப்பு), அளிது (பாவம்), அறத்துறையம்பி, ஆண்டகை (பஹதூர்), இயம் (வாத்தியம்), இயவர் (வாத்தியக்காரர்), இளையன் (ஜவான்), உரறு (கர்ச்சி), ஓவம் (சித்திரம்), உவகைக்கலுழ்ச்சி (ஆனந்தக் கண்ணீர்), எருவை (தலைவெளுத்து உடல் சிவந்திருக்கும் பருந்து), ஐயவி (வெண்சிறு கடுகு), ஐம்படை (பஞ்சாயுதம்), கண்ணுறை (மேலீடு), கண்ணோட்டம் (தாட்சிணியம்), கதழ்வு (விரைவு), கணியன் (ஜோதிடன்), கழுவாய் (பிராயச்சித்தம்), கிழார் (பெரும்பண்ணையார்), குணில் (குறுந்தடி, லத்தி), குருசில் (பிரபு), கோய் (கள்முகக்கும் கலம்), சுவல் (தோள்), சூள் ணை), செம்மல் (நேர்மையானவன்), செவ்வி (தக்க சமையம்), தோன்றல் (அரச மகன்), நவில் (பன்முறை சொல்லிப் பழகு, நுவல் (நுட்பமாய்ச் சொல்), நெடுமொழி (தற்புகழ்ச்சி மறைவுரை), பஞிலம் (Regiment), படைவீடு (Cantonment), பறந்தலை (போர்க்களம்), பூட்கை (tenent, morale), பொருநன் (சிப்பாய்), மன்பதை (Humanity), மதவலி (Sando), பனுவல் (பிரபந்தம்), மறுகு (வீதி), மழவர் (வீரர்), மள்ளர் (வீரர்), மாதிரம் (திசை), யாணர் (புதுவருவாய்), வஞ்சினம் (சபதம்), வயவர் (வீரர்), வல்வில் (வில்வலன்), வம்பலன் (நிலையில்லாதவன், இடமாறி), வேள் (சமீன்தார்), வேளாண்மை (உபசாரம்), முதலிய எண்ணிறந்த தமிழ்ச்சொற்கள் வழக்கொழிந்தன. (3) தென்சொற் பொருளிழப்பு

தமிழ்ச்சொற்குப் பதிலாக வடசொற்களை வழங்கியதால் சில தமிழ்ச் சொற்கள் பொருளிழந்து முள்ளன.

எ-டு : உயிர்மெய்.

பொருள்களெல்லாம் உயிர், மெய், உயிர்மெய்யென மூன்றா யடங்கும். இவற்றையொத்த எழுத்துகளும், உயிர், மெய், உயிர்மெய் எனப் (உவமையாகுபெயர்) பெற்றன. 'பிராணி' என்னும் வடசொல் வழங்கவே 'உயிர்மெய்' என்னுஞ் சொல் தன் பொருளை யிழந்தது. பிராணனை யுடையது பிராணி. உயிரையுடைய மெய் உயிர்மெய்.

(4) ஐயறவு

வடசொற் கலப்பால், ஏனாதி, கவசம், சகடு, தானை, தேயம், பாரம், புதல்வர், வதுவை, வாத்தியம் (வாழ்த்தியம்) முதலிய பல சொற்கள் வடசொல்லோ தென்சொல்லோ என மொழியாராய்ச்சியாளரும் மயங்கற் கிடனாயுள்ளன. வடசொற் கலந்திராவிடின், தமிழிலுள்ள சொல்லெல்லாம் தமிழ்ச்சொல்லேயென்று கொள்ளப்படுமன்றோ!

(5) வடசொற் போன்மை

வடசொற் கலப்பினால், பல தூய தென்சொற்கள், ஆரிய மொழிகளில் சென்று வழங்குவது காரணமாக, அல்லது ஆரியச் சொல்லோடொலி யொத்தமை காரணமாக, ஆரிய அல்லது வடசொற்களாக ஆராய்ச்சி