உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




16

பண்பாட்டுக் கட்டுரைகள்

இலக்கம் (குறி) : எல் இலகு - இலக்கு. இலக்கம் = விளக்கம், விளங்கும்

99

ம், இடம், குறி, விளக்கத்திற் கெடுத்துக் காட்டு. "எல்லே யிலக்கம்’ என்பது தொல்காப்பியம். இலக்கு + இயம் = இலக்கியம் = எடுத்துக் காட்டு, குறி. cf. E. illustrate-L. illustratum, to light up. நூற் றொகுதியைக் குறிக்கும் இலக்கியம் என்னுஞ் சொல் வேறு. அஃது இலக்கு (= எழுது) என்பதனடியாய்ப் பிறந்தது.

உரகம் : உர = பொருந்து, தழுவு, உரம் = மார்பு. ஒ.நோ ; மரு - மருமம் மார் மார்பு, மருவு = கல, தழுவு. உரம் - உரகம் = மார்பினால் ஊர்வது, பாம்பு.

-

உரு : உரு = (வி), தோன்று. (பெ.) தோற்றம், வடிவம், வடிவத்தையுடைய ஒரு பொருள், உடம்பு, ஒரு வடிவத்திற்குள் எழுதப்படும் மந்திரம். மந்திரம் போன்ற பாட்டு. உரு உருவு உருவம். உருவு - உருபு = வேற்றுமை வடிவம். உருப்படி = ஒரு தனிப்பொருள். 'உருப்படு', 'உருக்குலை' முதலிய நூற்றுக் கணக்கான கூட்டுச் சொற்கள் தொன்று தொட்டு உலக வழக்கில் வழங்குதலையும், உருபு என்பது ஓர் இலக்கணக் குறியீடாய் இருத்தலையும் நோக்குக.

உலகம் : சுள்

சுல் - சுலம்

சுலவு உலவு = வளை, சுற்று. சுலம் உலம் உலகு - உலகம் = வட்டமா யிருப்பது அல்லது சுழல்வது அல்லது கதிரவனைச் சுற்றி வருவது. உலம் வருவோர் (புறம், 51) = சுழல்வோர். உலா = நகரை வலமாகச் சுற்றி வருதல், ஒ.நோ. : கொள் கோள் =

Planet. கொள் = வளை. சுற்று, கொட்பு = சுற்றுகை. கொள் - கொடு - கோடு கோணு.

ஏமம் : ஏ-ஏம்-ஏமம் = பாதுகாப்பு, இன்பம். ஏ = உயர்ச்சி, “ஏ பெற்றாகும்”, என்பது தொல்காப்பியம். விலங்குகளாலும் பகைவராலும் வெள்ளத் தாலும் துன்பம் நேரும்போது, உயர்ந்த இடம் பாதுகாப்பிற்கேது வானது. பாதுகாப்பால் இன்பமுண்டாகும். ஏமம் - சேமம், ஒ.நோ : ஏண் சேண். சேமவச்சு (102).

ஏனாதி : ஏனை (யானை) + அரி = ஏனாரி

=

ஏனாதி யானையைக் கொன்றவன். ஒ.நோ : கோடு + அரி = கோடரி. பருக்கை - பதுக்கை.

கடும்பு : குடம் - குடி குடும்பு - கடும்பு. குடும்பு - குடும்பம். குடி = உட

னுள்ளது, உடம்பு போன்ற வீடு, வீட்டு வாழ்க்கை, வீட்டிலுள்ள மனைவி, மனைவி மக்களாகிய குடும்பம், குடும்ப மரபு, குலம், ஒரு குலம் வாழிடம், ஊர். கடும்பு = குடும்பம், சுற்றம்.

கணன் : கல

கந்தன் : கல்

கள களம் கணம் - கணன் = கூட்டம்.

கந்து – கந்தம் - கந்தன் = ஆன்மாக்கட்குக் கற்றூண் போற் பற்றுக்கோடானவன், முருகன். கந்தழி = பற்றுக்கோடற்ற கடவுள்.