உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




புறநானூறும் மொழியும்

17

கந்தபுராணத்திற் கூறப்பட்டுள்ளபடி, கந்தன் இமயமலைச் சரவணப் பொய்கையிற் பிறந்தவனல்லன். இமயமலை தோன்றியதற்கு முன்பே குமரிநாட்டில் குறிஞ்சித் தெய்வமாக வணங்கப்பட்டவன். முதற்காலத்தில் முருகனுஞ் சிவனும் ஒருவனே. திணைமயக்க மேற்பட்டபின், முருகன் முழுமுதற் கடவுளாகவும் வணங்கப்பட்டான்.

கம்மியன் :

=

=

=

=

கடு-கரு. கடு-கடி-கரி. கடுத்தல் = மிகுதல். கருத்தல் தோன்றுதல். கரித்தல் = மிகுதல். மிகுதற் கருத்தினின்றும் தோன்றற் கருத்தினின்றும் செய்தற் கருத்துத் தோன்றியதாகத் தெரிகின்றது. ஒ.நோ: E. make, from L. magnus, great. அலம் + கரி = அலங்கரி அழகு செய். கரு கரி என்னுஞ் சொற்கள் செய்தற் பொருளில் வழங்கிய நூல்கள் இறந்துபட்டன. பண்டைக்காலத்தில் விரிவான அகராதிகள் எழுதப்படாமையால், குமரிநாட்டுச் சொற்களில் பலவற்றைக் காட்டுவதற்கு ஒரு வழியுமில்லை. கரி + அணம் = கரணம் செய்கை, செய்யும் சடங்கு, மணச்சடங்கு, செய்யுங்கருவி. ஒ.நோ : வரி + அணம் = வரணம். கரு + வி = = 5 கருவி. கரு + LOLD = மம் கருமம். ஒ.நோ : பரு + மம் = பருமம். கரணம் இயம் காரணம். கரி + கரியம் - காரியம். ஒ.நோ : கண்டம் - காண்டம். கரு - க்ரு (வ.). ஒ.நோ : துர - த்ரு (வ.). கருமம் செய்கை, தொழில், வினைப் பயன், செயப்படுபொருள். கருமம் என்பது முதலாவது உழவுத் தொழிலையும், பின்பு கைத்தொழிலையுங் குறித்தது. கருமம் - கம்மம் தெலுங்குழவர். கமக்காரன் - உழவன். கம்மி = தொழிலாளி. கம்மாளன் = ஐவகைக் கொல்லருள் ஒருவன். கம்மியம் கைத்தொழில், கம்மாளத் தொழில், கம்மியநூல் = சிற்பநூல். கம்மியன் = தொழிலாளி, கம்மாளன், நெய்பவன். கருமகன் - கருமான் - கருமன் கொல்லன். கருமகன் என்னும் பெயரில் தொழிலையாவது இரும்பையாவது குறிக்கும்.

=

=

கம். கம்மவார்

-

=

கரு என்பது

மாரியல்லது காரியமில்லை யாதலால், கருத்த மேகம் கருவி

எனப்பட்டது என்று கொள்வதும் ஒன்று.

கரகம் : குடம் - குடகம் - குரகம் - கரகம் = வளைந்த அல்லது குவிந்த நீர்க்

கலம், ஒ.நோ : முயங்கு மயங்கு, முயல் - மயல், குடம் - கடம்,

குடும்பு - கடும்பு, முடி - மடி.

கரு : கரு - கருப்பு - கருப்பம் - garbha. மேகம் சூல் கொண்டபோது கருத்திருத்தலால், சூல் கருவெனப்பட்டது.

கவசம் : கவி-கவசம்.

கவரி : இஃதொரு விலங்குப் பெயராதலானும், வேறு பெயர் தமிழி லிதற்கின்மையானும், இது தமிழ்ச் சொல்லென்றே தெரிகின்றது. கவரி - சவரி - சவரம் - சமரம் - சாமரம்.

களம் : மேற்கூறப்பட்டது,