உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




புறநானூறும் மொழியும்

19

என்பது தொல்காப்பியம். குருதி, குருதிக் காந்தள் (செங்காந்தள்), குருதிவாரம் (செவ்வாய்க்கிழமை) முதலிய சொல்லையும் வழக்கையும் நோக்குமிடத்து, குரு என்பது செந்நிறம் என அறியப்படும். சிவபெருமான் நிறம் செம்மையென்றும் அவன் ஆசிரியர் வடிவில் ஆன்மாக்களை ஆட்கொள்வானென்றும் நூல்கள் கூறுவதாலும், ஆசிரியனுக்குக் குரு குரவன் என்னும் பெயர்களுண்மையாலும், குரு என்னும் நிறங்குறித்த சொல்லே குரவன் என்று திரிந்து ஆசிரியன், பெரியோன் என்று பொருள் பட்டதெனத் தோன்றுகிறது. குரு என்னும் சொல்லும் ஆசிரியனைக் குறித்தலால், அது பண்புப் பெயராகும்போது பெருமை என்று பொருள்படும். பெருமை என்பது பருப்பொருளும் நுண்பொருளுமாகிய வடிவுநிலை யிரண்டற்கும் பொதுவாதலின், கனம் என்னுஞ் சொல் மதிப்பையும் நிறையையுங் குறித்தாற்போலக் குரு என்னுஞ் சொல்லும் பெருமையையும் நிறையையுங் குறிக்குமென்க.

குரு Skt. guru. L. gravis E. grave, weighty, குரூஉ அளபெடை. கூடகாரம் : கூடு - கூடம். ஆர் = ஆரம் - வட்டம். கூடவாரம் - கூடகாரம், கூடாரம். ஒ.நோ : கொட்டாரம்.

கோன் : கோ = பசு. கோ + அன் = கோவன்-கோன் - கோனான்.

கோவன்

= இடையன், ஆக்களை இடையன் காப்பது போல் மக்களைக் காக்கும் அரசன், உயிர்களாகிய ஆக்களைக் காக்கும் கடவுள் (சிவன்), இவை ஆரியக் கருத்துகளல்ல. இவற்றைத் தமிழரிடத்தினின்றே ஆரியர் கண்டறிந்தனர். பண்டைத் தமிழர் செல்வத்தை மாடென் றமையாலும், இயற்பெயர் சினைப்பெயர் சினைமுதற்பெயர் முறைப்பெயர் என்னும் நால்வகையில் மக்கள் பெயரையே மாடுகட் கிட்டு வழங்கியதாலும், அவர்கள் மாடுகளை மக்களைப் போற் பேணியமை விளங்கும். கோன்-கோ = அரசன்.

கோடி: கோடு கோடி

= கடைசி, கடைசி யெண்.

சடை : சடசடவென்றிருப்பது சடை. சடசடவென்பது ஒரு விறப்புக் குறிப்பு. சடையன் சடைமுனி என்பன தொன்று தொட்டு வழங்கும் தமிழ்ப் பெயர்கள்.

சமர் : சமம் சமர்

சமரம், சமர் அமர். சமம் = ஒப்பு. கலப்பு, போர்,

ஒ.நோ : பொரு-போர்.

சாடி : சால்-சாடி.

சுரம் : சுள்-சுர்-சுரம் = சூடு, காய்ச்சல், பாலைநிலம்.

சூர் : சுர் - சுரம். சூரம் - சூரன் - சூர், சுர் - சூர் = நெருப்பா லுண்டாகும் அச்சம்.

ஞமன் : சமன் - (யமன்) - நமன் - ஞமன் = நடுநிலையுள்ள கூற்றுவன். யமன்

எமன்.