உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




20

பண்பாட்டுக் கட்டுரைகள்

ஞாயிறு : நய-நாயன் - நாயிறு - ஞாயிறு = கோள்களுக்குத் தலைவன். நாயன்

=

விரும்பப்படத்தக்க தலைவன். ஒ.நோ : நம்பு - நம்பன். “நம்பு மேவு நசையா கும்மே,” என்பது தொல்காப்பியம்.

தவம் : தபு + அம் = தபம் - தவம் = கெடுத்தல், நீக்குதல், பற்றறுத்தல். நீத்தார், துறவு என்னுஞ் சொற்களின் பொருளை நோக்குக. தவிர், தவத்தல் (நீங்குதல்) என்பன தவம் என்பதோடு தொடர்புடைய சொற்கள்.

தாயம்: தாதாய்-தாயம்

=

தாயினிடத்தினின்று பெறும் உரிமை, உரிமை.

திசை : திக்கு - திகை - திசை = திகைப்பிற்கிடமான எல்லை. திக்குத் திக்கென் றிருக்கிறது, திக்குமுக்காடல் முதலிய வழக்குகளை நோக்குக. திசைத்தல் = திகைத்தல். திசைச்சொல் என்பது ஓர் இலக்கணக் குறியீடு. திரு : திருவென்னுஞ் சொல் தென்சொல்லே. திருமகள், திருமனை, திருமால் திருவில் திருவரங்கம் முதலிய பழைமையான சொற்களை நோக்குக. திரு - ஸ்ரீ = சீ. =சீ

தீ : தேய் - தே - தீ = உரசுதலாலுண்டாகும் நெருப்பு.

-

=

துலாம் : துல் - துன் = பொருந்து, பொருத்தித் தை. துல் - துலை = பொருத்தம், ஒப்பு, இரு புறமும் ஒத்த தராசு. துல் - துலா துலாம் - துலான் தராசு, ஓர் எடை, துலா + கோல் = துலாக்கோல். துலா = துலாக்கோல். போன்ற ஏற்றம். கைத்துலா, ஆளேறுந் துலா என்பன தொன்று தொட்ட வழக்கு. துன் - துறு = பொருந்து, நெருங்கு.

தூண் :துண் - தூண் = துணிக்கப்பட்ட கல். தூண் + அம் = தூணம் ஸ்தூண (வ). தூது : ஊ - தூ -தூது.

தெய்வம் : தேய் தேய்வு தெய்வு - தெய்வம், தேய்வு - தேவு - தேவன். தேவு - தே, தெய்வம் = தீ வடிவான கடவுள்.

நகர் : நகர்தல் = மெல்ல இடம்பெயர்தல், விரிவடைதல். நகர் = குடி பெருகப் பெருக மெல்ல மெல்ல விரியும் மனை அல்லது ஊர்.

நாகம் : நகர் - நாகம் - நாகர். ஒ.நோ : snake, L.S. snican, to creep. நாவாய் : நால்வாய் - நாவாய் = யானை போல் அசையும் கப்பல். "நாவாய் -களிறுகள் போற்றூங்குங் கடற்சேர்ப்ப”

என்பது பழமொழி.

"வெளிலிளக்குங் களிறுபோலத்

தீம்புகார்த் திரைமுன்றுறைத்

தூங்குநாவாய் துவன்றிருக்கை’

என்பது பட்டினப்பாலை.

=

"5

நுகம் : உகத்தல் பொருந்துதல், ஏற்றல், உகம் காளைகளை வண்டியிற் பொருத்தும் அல்லது

=

(யுகம்) - நுகம் பூட்டுங்கோல். உக -