உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




22

பண்பாட்டுக் கட்டுரைகள்

மாயம் : மாய் + அம் = மாயம். மாய் + = மாயை =

மயக்குவது, மயக்கம்.

மாலை : முள் முள

முய முயல் - மயல் மால்

-

விரைந்து மாய்ந்து

மாலை =

பூக்கள்

மயங்கிய தொடை, பகலும் இரவுங் கலக்கும் வேளை,

ஒ.நோ:முயங்கு மயங்கு.

மீன் : மின் - மீன் - மீனம்.

முகம் : ஊ மூ - முகம்

முகம் = முன்னாலிருப்பது, தலையின் முன்பக்கம், முன்பக்கம். துறைமுகம், போர்முகம், நுதிமுகம் என்பன ஒவ்வொரு முன்னிடத்தைக் குறிக்கும். முகப்பு = முன்புறம். முகம் - முகன் முகனை - மோனை. முகம் - முகமன். முகம் - முகர் - முகரை. புகர் முகம், செம்முகம், களிற்றுமுகம் முதலிய புறநானூற்றுத் தொடர்களில் முகமே குறிக்கப்பட்டது. கருமுகமந்தி ஆறுமுகம், திருமுகப் பொலிவு, முகங்கோணுதல், முகஞ் சுளித்தல் முதலிய பல தொடர்களிலும் அஃதே.

"நெஞ்சங் கடுத்தது காட்டும் முகம்" என்றார் திருவள்ளுவர். நூன்முகம், முகவுரை முதலியவை நூலின் முற்பகுதியாகும். முகம் என்னுஞ் சொல் தமிழில் ஒருபோதும் வடமொழியிற்போல் வாயைக் குறிக்காது. முகம் = முன்னிடம், இடம். முகத்தல் = தன்னிடத்துக் கொள்ளுதல், உள்ளிட்டளத்தல்.

-

முத்தம்: முட்டு முத்து முத்தம் - முக்த (வ.), ஆமணக்கு குருக்கு முதலியவற்றின் விதைகள் முட்டி வெடிப்பதால் முதலாவது முத்தெனப் பட்டன. அவ் விதைகள்போற் சிப்பிக்குள்ளிருக்கும் மணியும் முத்தெனப்பட்டது. பண்டைக் காலத்தில் முத்திற்குச் சிறந்தது செந்தமிழ்ப் பாண்டிநாடே.

முரசு : முரண் - முரடு - முரசு - முரஜ (வ.) = உருட்டுக்கட்டையிற் கடைந்து செய்த மத்தளம். முரடு - முருடு.

வட்டம் : வள் + தம் = வட்டம். இனி, வட்டு + அம் = வட்டம் என்றுமாம். வள் என்னும் வழிவேர் தமிழிற் பல்வேறு வடிவங்கொண்டு நூற்றுக் கணக்கான சொற்களைப் பிறப்பிக்கும். வ்ருத்த என்னும் வடசொல் தமிழில் வட்டம் என்று திரியவில்லை. வட்டம் என்னும் சொல்லே வ்ருத்த என்று திரிந்தது. வளை, வள்ளம், வட்டு, வட்டி, வண்டு, வணர், வணங்கு, வளர், வளார், வள்ளி, வரி, வரை, பரி முதலிய பல சொற் கட்கும் வள் என்பதே வேர். இச் சொற்கட் கெல்லாம் இனமானவை மொழியிலில்லை. வட்ட - வ்ருத்த (வ.) L. verto, to turn.

=

வண்ணம் : வரி + அணம் =

வரணம் – வண்ணம். வரி = வரைவு, நிறம், எழுத்து, பாட்டு, வரணனை. வரணம் = வரைவு, எழுத்து, பாட்டு, நிறம், குலம். வண்ணம் = நிறம், வகை, பாட்டு, சந்தம்.