உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




புறநானூறும் மொழியும்

வணிகன் : வாணி வாணிகம் -வாணிகன்

வள்

23

வணிகன் = விலை கூறிப்

பொருள் விற்பவன், வாணி = சொல், வாணிகன் வாணியன். இனி, வணிகம் வாணிகம் என்றுமாம். வளைவு பொருள் வளர்ச்சியைக் குறிக்கும். தனித்தமிழ்ப் பகுப்பான நால்வகை மக்கட் பிரிவில், விற்பனையாளர் வணிகர் அல்லது வாணிகர் என்னுஞ் சொல்லாலேயே தொன்று தொட்டுக் குறிக்கப்படுகின்றனர்.

வதி : மேற் கூறப்பட்டது.

வள்ளி : வள் வள்ளி - வல்லி = வளைந்த கொடி.

ஒ.நோ : கொடு

கொடி.

வேகம்: வேகு + அம் = வேகம் = கொதிப்பு, கடுமை, கடுஞ்செலவு. சுறுசுறுப்பு,

சூட்டிக்கை என்பனவும் நெருப்புக் குறித்த சொல்லினின்றும் பிறந்தவையே. தீப்பற்றிய பொருள்கள் விரைவாய் வெந்து விடுவதால் விரைவு வேகம் எனப்பட்டது.

அன்னம் (பறவை), சகடம், தாமரை, தாரம் (பண்டம்) முதலிய சில சொற்கட்கு இதுபோது வேர்ப்பொருள் தெரியாவிடினும், இவை தென்சொற்களே என்பது தேற்றம். இச் சொற்கள் தோன்றிப் பல்லாயிர மாண்டுகளானமையாலும், இவற்றின் வேர்ப்பொருளைக் காட்டக்கூடிய பிற சொற்கள் இறந்தொழிந்தமையாலும், பண்டைக்காலத்துச் சொல்லியலகராதி யொன்றும் நமக்கின்மையாலும், இவற்றின் வேர்ப்பொருளை அறிய இடமில்லை.

(6) சொல் வடிவு மாற்றம்.

எ-டு :

உயர்த்தி உசத்தி - ஒசத்தி - ஒஸ்தி, வேட்டி - வேஷ்டி. (7) தூய்மையிழப்பு.

எ-டு : வேண்டாத பிறமொழிச் சொற்கள் தமிழில் வந்து வழங்க வழங்க, அதன் தூய்மை கெடுவது ஒருதலை.

(8) மொழி வழக்கழிவு.

எ-டு: தமிழ்ச்சொற்களெல்லாம் ஒவ்வொன்றாய் வழக்கு வீழ்ந்து கொண்டே செல்லின், இறுதியில் தமிழென ஒரு மொழியே யிராதுபோம் என்பது உறுதி. பின்பு, இதுவரை அதைப் புகழ்ந்து வந்ததிற்கு மாறாக,

ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதைந்தாயுன்

சீரழிவுத் திறம் நினைந்து செயலற்று வருந்துதுமே.

என்று இரங்கவே நேரும்.

களிப்பு, மகிழ்ச்சி, உவகை என மூன்று தமிழ்ச்சொற்களிருப்பவும், அவற்றுள் ஒன்றேனும் வழங்காமல், ஆனந்தம், சந்தோஷம் என்ற வடசொற்களே வழங்கி வருவதை ஒரு காட்டாகக் கண்டு தெளிக.