உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




24

9. அருவடிவச் சொற்கள்

பண்பாட்டுக் கட்டுரைகள்

அணிந்தன்று : அணிந்து + அன்று = அணிந்தன்று = அணிந்தது. அன் + அது

= அன்னது = அத்தகையது, அது. அன் + து (அது) = அன்று = அது. அறிதீ : அறியும் - அறியுந் + ஈ = அறியுநீ - அறியுதீ - அறிதீ - அறிதி-

1. முன்னிலையொருமை நிகழ்கால வினைமுற்று

2. முன்னிலை யொருமை எதிர்கால வினைமுற்று 3. ஏவல் ஒருமை வினைமுற்று.

இனி, அறியும் + நீ = அறியுநீ - அறியுதீ என்றுமாம். ந த.போலி. ஒ.நோ ; நுனி - நுதி - துதி. 'தி' முன்னிலை யொருமை விகுதியாகக் கருதப்பட்ட பின் 'ஒத்தி' போன்ற வினைகள் தோன்றின. ஒரு காலத்தில் 'செய்யும்' என்னும் முற்று, தன்மை முன்னிலையிலும் வழங்கிற்று.

-

அடுநை : அடும் அடுந் + ஐ = அடுநை. ஈ-ஏ-ஐ, முன்னிலை யொருமை

விகுதி.

அறஞ்செய் தீமோ : அறஞ்செய்து + ஈயும்

+

=

ஓ அறஞ்செய் தீயுமோ

அறஞ்செய்தீமோ. ஈயும் = அருளும், இடும் (துணைவினை); ஆர்வக் குறிப்பிடைச் சொல்.

அறிந்தீயார் : அறிந்து + ஈயார் = அறிந்தீயார் = அறிந்திடார் (அறியார்) :

=

இடு (துணைவினை).

அறியுமோன் : அறியும் + அவன் = அறியுமவன்

அறியுமோன். “ஆஓ வாகுஞ் செய்யு ளுள்ளே.”

அறியுமான்

அறுமார் : அறுவார் - அறுமார் = அறுதற்கு. உண்ணுவார் - உண்ணுமார்

உண்மார் = உண்ண. கொள்வார் - கொள்மார் - கொண்மார் = கொள்ள. பண்டைக்காலத்தில் ஒவ்வோர் எதிர்காலவினை முற்றும் 'செய்வான்' என்னும் வினையெச்சமாக வழங்கி வந்தது. பிற்காலத்தில், ஆண்பாற் படர்க்கை யொழிந்த மற்றெல்லாம் வழக்கு வீழ, அவ் வாண்பாற் படர்க்கையே எல்லாவற்றுக்கும் பொதுவாக வழங்கி வருகின்றது. இதுவே 'வான்', 'பான்' ஈற்று வினையெச்சம்.

-

அன்று : (அன்றி) ; அல்லாது அல்லது - அன்று (அல்+து), இல்லாது இல்லது - இன்று. சொல்லாது போனான், நன்று சொன்னாய் என்னும் வழக்குகளை நோக்குக.

ஆகியர் : ஆகு+ஈயர் = ஆகீயர் - ஆகியர் = ஆகுக. ஈயல்

ஈயல் = ஈக, இடுக (துணைவினை).

=

ஒ. நோ : செயல் செய்க. “இருடீர வெண்ணிச் செயல். ஆகிலியர் : ஆகு + இல் + இயர் = ஆகிலியர்.

ஆகின்று : ஆகு + இன் + து (அது) = ஆகின்று = ஆகினது. : +

ஈயர் - இயர்.