உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




26

பண்பாட்டுக் கட்டுரைகள்

பொருள் படுவதொரு விகுதி. ஒ.நோ : வாவேன் = வரமாட்டாயா, சொல்லுங்களேன் = சொல்லமாட்டீர்களா.

உறாற்க: உறு + அல் அல் + க = உறற்க -உறாற்க. 'க' விகுதி படிக்க, விடுக்க என்னும் வியங்கோள்களினின்று தோன்றியது.

ஏத்துகம் : ஏத்துவம் - ஏத்துகம். வ-க, போலி.

ஏனோர் : ஏ-ஏன்-ஏனோர்

=

யார்? ஏ-யா.

கண்டிகும் : கண்டு + ? ஒ.வே: கண்டு + + + யாம் = கண்டியாம் - கண்டியம் கண்டிகம் - கண்டிகும்.

=

-

கண்டிசின் : (கண்டேன்) : கண்டு+ ஈயேன் கண்டீயேன் கண்டீயின் கண்டீசின் - கண்டிசின். ஈயேன் = ஈந்தேன், இட்டேன் (துணைவினை). ஒ.நோ: போயேன் = போனேன்.

கழிப்பி (கழித்து) : கழிப்பு என்னும் தொழிற்பெயரே மீண்டும் பகுதியா யிற்றுப் போலும். ஒ.நோ : நகு நகை - நகைத்து. இனி கழி+பு

கழிப்பு, பிறவினை என்றுமாம்.

=

களைமே (களைவாய்) : களையும் + ஏ = களையுமே - களைமே. 'களையும்' பால்வழுவமைதி. செய்யுமே - செய்ம்மே. 'ஏ' ஆர்வப் பொருள் விகுதி. 'ஏன்' விகுதி 'ஏ' எனக் குறைந்ததெனினுமாம். 'மொழிமோ' என்பதில் 'ஓ' இப்பொருள்பட வந்தது.

காண்குவந்திசின் : காண்கு = காண்பேன் (முற்றெச்சம்).

காணூஉ (கண்டு) : காணூ காணூஉ அளபெடை. 'செய்யூ' வாய்பாட்டு இறந்தகால வினையெச்சம்.

குரீஇ : குரி (குருவி) என்பது பண்டை வடிவம் போலும். குரீஇ, அளபெடை. கேளலம்: கேள் + அல் + அம் = கேளலம்.

+ +

சாயின்று : சாய் + இன் + து (அது) = சாயின்று. சாயினது - சாயின்று. ஆயினது போயினது என்பவற்றோடு ஒப்பு நோக்குக. இன்னது - இனது - இன்று. தொலைச்சி : (தொலைத்து) தொலைச்சு தொலைச்சி. தொலை + சு = தொலைச்சு, பிறவினை.

நிலியரோ : நில் + இயர் + ஓ = நிலியரோ = நிற்க. ஈயல் - ஈயர் - இயர்.

அசைநிலை : ஆர்வப்பொருட்டுமாம்.

பழுனி : பழுத்து - பழுன்னு - பழுன்னி - பழுனி.

மரீஇ :மரி = மருவி, மரீஇ, அளபெடை.

ஓ,

வைகுதும்: வைகு+உது+ம் = வைகுதும் = வைகுவோம். 'உது', தன்மை யொருமை எதிர்கால வினைமுற்று விகுதி; 'ம்' (உம்) தன்மைப் பன்மை விகுதி.

-'புறநானூற்றுச் சொற்பொழிவுகள்" நூல் 1944