உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




2

  • வனப்புச் சொல்வளம்

தொல்காப்பியர் காலத்தில், செய்யுள் எழுவதற்குரிய நிலைக்களங்கள், பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் என எழு வகையாய் வகுக்கப்பெற்றிருந்தன.

"பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே

அங்கதம் முதுசொலோ டவ்வேழ் நிலத்தும் வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் நாற்பேர் எல்லை யகத்தவர் வழங்கும் யாப்பின் வழிய தென்மனார் புலவர்

என்பது தொல்காப்பிய நூற்பா.

""

(தொல். 1336)

அவ் வெழுவகை நிலைக்களத்துள், பாட்டு என்பது அம்மை(1491), அழகு(1492), தொன்மை(1493), தோல்(1494), விருந்து(1495), இயைபு (1496). புலன்(1497), இழைபு(1498) என எண்வகை வனப்பாக வகுக்கப் பெற் றிருந்தது.

வனப்பு என்னும் தூய தீந்தமிழ்ச் சொல் இருக்கவும், அதற்குப் பகரமாகக் காவியம் என்னும் வடசொல்லைக் காப்பியம் என்று திரித்து,

"நாடகக் காப்பிய நன்னூல் நுனிப்போர்

(மணிமே. 19 : 80)

என்று, முதன்முதலாக ஆண்டவன், கடவுட் கொள்கையற்ற வடநாட்டு மதமாகிய புத்தத்தைத் தழுவித் தமிழுணர்ச்சி கெட்ட சீத்தலையன் போன்ற சீத்தலைச் சாத்தன்.

தொல்காப்பியத்தில் இலக்கணம் கூறப்பெற்ற எண்வகை வனப்பிற் கும் இலக்கியமாயிருந்த பனுவல்களெல்லாம், அறவே இறந்துபட்டன. ஆதலால், கி.பி. 3ஆம் நூற்றாண்டிற்கும் 10ஆம் நூற்றாண்டிற்கும் இடைப் பட்ட பத்து வனப்புகளும், ஐம்பெருங் காப்பியமென்றும் ஐஞ்சிறு காப்பியமென்றும், அக் காலத்திறுதியில் இரு கூறாக வகுக்கப்பட்டன.

சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி என்னும் ஐந்தும் பெருவனப்பு; நீலகேசி, சூளாமணி, யசோதரகாவியம், பெருங்கதை, நாககுமார காவியம் என்னும் ஐந்தும்

  • காப்பியச் சொல்வளம்