உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




28

பண்பாட்டுக் கட்டுரைகள் சிறுவனப்பு ஆகும். பெருவனப்புள் இறுதியிற் குறிக்கப்பட்ட இரண்டும், சிறுவனப்புள் இறுதியிற் குறிக்கப்பட்ட ஒன்றும் இன்றில்லை.

வனப்பைப் பிற்காலத்திலக்கணியர், தொடர்நிலைச் செய்யுள் தனிநிலைச் செய்யுள் என்று இருவகையாகவும் குறிப்பாராயினர்.

ஒப்புயர்வற்ற ஒருவனைத் தலைவனாகக் கொண்ட நீண்ட கதை தழுவி, காண்டம் படலம் முதலிய பெரும் பகுப்புகளைக் கொண்டு, பல்வேறு வகைப்பட்ட காலம், இடம், நிகழ்ச்சி, மக்கள் வாழ்க்கைமுறை, தொழில், பழக்கவழக்கம், அரசியல், ஊணுடையுறையுள், நிலைத்திணையும் இயங்குதிணையுமாகிய மற்ற வுயிரினங்கள் முதலிய பொருள்களைப் பற்றிய வண்ணனைகளை யுடையதாய், விரிவாய் வரும் வனப்பிலன்றி, வேறெவ்வகைப் பனுவலிலும், சொல்வளத்தைப் பேரளவாகக் காண முடியாது. அவ் வனப்புச் சொல்வளமும், வனப்பாசிரியனின் புலமைத் திறத்தைப் பெரிதும் பொறுத்ததாகும்.

ஐம்பெரு வனப்புகளுள் சிலப்பதிகாரமும் சிந்தாமணியும், ஐஞ்சிறு வனப்புகளுள் பெருங்கதையுமே சொல்வளமுடையன. இம் மூன்றும் முறையே தலையிடை கடையாம்.

சிலப்பதிகாரச் சிறப்புச் சொற்கள்

அகவை = வயது (வ.).

அதள்புனையரணம் = தோற்கைத்தளம் (glove).

அரிமுகவம்பி = மடங்கல்(சிங்க) முகமுள்ள படகு. அலவை = வியபிசாரம்.

இலவந்திகை = நீர் நிறைத்து வெளியேற்றும் பொறியமைந்த குளம்,

அதையடுத்த சோலை.

இறும்பூது = அதிசயம் (வ.), புதுமை (wonder). உள்வரிக்கோலம் = மாறுகோலம் (disguise).

ஏதம் = அபாயம்(வ.) (danger).

ஓசுநர் = கலவினைஞர் (sailors).

கண்ணெழுத்து = மூட்டைகளின் மேல் எழுதிய முகவரி (superscrip- tion).

கலங்கரை விளக்கம் = Light House

காசறை = கஸ்தூரி(வ.) மான்.

காழியர் = பிட்டு வாணிகர்.

காலதர் = சாளர வகை.

குரவை = எழுவர் அல்லது பன்னிருவர் வட்டமாய் நின்று ஆடிவரும்

கூத்து.