உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வனப்புச் சொல்வளம்

கூவியர் = அப்ப வாணிகர்.

சுருங்கை = கரந்த படை, கீழ்நிலவழி (Subterranean passage).

திரையல் = வெற்றிலைச் சுருள்.

நீரணி மாடம் = பள்ளியோடம்.

பதியெழுவு = நகரவாணர் வெளியேற்றம் (Evacuation).

கரிமுகவம்பி = யானை முகமுள்ள படகு வகை. பாடுகிடத்தல் = சத்தியாக்கிரகம்(வ.) பண்ணுதல்.

வம்பமாக்கள் = புதிதாய் வந்தோர், அயல்நாட்டார்.

வையம் = குதிரை பூட்டிய தேர்போன்ற வண்டி(Coach).

29

இனி, நால்வகைப் பெரும் பண்ணும், நால்வகைப் பண்பகுப்பும், நால்வகைப் பண்குலமும், நால்வகைப் பாலையும், நால்வகை நரம்பும், எண்வகை எழாலும், எண்வகை இசைக்கரணமும், நால்வகை முழவும், இருவகைத் தாளத் தொகுதியும், நாற்பாணி யுறுப்பும், பத்து வகை இசைப் பாவும், மூவகை வரிப்பாட்டும், மூவகைச் சார்த்துவரியும், பிறவுமாகிய இசைத்தமிழ்ப் பகுதிகளும்; பல்வகைப்பட்ட இருவேறு கூத்தும், பதினோராடலும், எண்வகை வரிக்கூத்தும், இருவகைக் குரவையும், முப்பத் திருவகை நளிவினையும் (அபிநயமும்), மூவகை யெழினியும், பிறவுமாகிய நாடகத் தமிழ்ப் பகுதிகளும் சிலப்பதிகாரத்திற்கே சிறப்பாம்.

மாதவி காலத்து மகளிர் அணிகள்

1. விரலணி = கான்மோதிரம்

2. பரியகம் = காற்சவடி

3. நூபுரம் = சிலம்பு

4. பாடகம் = ஒருவகைக் காலணி 5.சதங்கை

6. அரியகம் = பாதசாலம்

7. குறங்கு செறி = கவான்செறி

8. விரிசிகை = முப்பத்திருவட மேகலை

9. கண்டிகை = மாணிக்க வளை 10.தோள்வளை

11. சூடகம்

12. கைவளை = பொன்வளை

13. பரியகம் = பாசித் தாமணி, கைச்சரி

15. பவழ வளை

16. வாளைப்பகுவாய் மோதிரம் 17. மணி மோதிரம்

18. மரகதத்தாள் செறி = மரகதக் கடைசெறி 19. சங்கிலி = வீரச்சங்கிலி

20.நுண்ஞாண்

21. ஆரம்

22. கயிற்கடையொழுகிய கோவை = பின்றாலி 23. இந்திரநீலக்கடிப்பிணை = நீலக்குதம்பை 24. தெய்வவுத்தி = சீதேவி

25. வலம்புரி

26. தொய்யகம் = தலைப்பாளை, பூப்பாளை 27. புல்லகம் = தென்பல்லியும் வடபல்லியும்.

14. வால்வளை = சங்கவளை, வெள்ளிவளை

மகளிர் நீராடுதற்குரிய பத்துத் துவர், ஐந்துவிரை, முப்பத்திருவகை ஓமாலிகை முதலியனவும் சிலப்பதிகாரக் கடலாடு காதையிற் குறிக்கப் பெற்றுள. அவற்றின் விரிவை அடியார்க்குநல்லார் உரையிற் காண்க.