உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




44

பண்பாட்டுக் கட்டுரைகள்

அமைச்சனின் நால்வகைத் தகுதிகளும் பின்வருமாறு ஆய்ந்து

தெளியப்படும்.

1. அறத்தேர்வு

CC

என்றோ,

ee

ஆடுநனி மறந்த கோடுய ரடுப்பி னாம்பி பூப்பத் தேம்புபசி யுழவாப்

பாஅ லின்மையிற் றோலொடு திரங்கி யில்லி தூர்ந்த பொல்லா வறுமுலை சுவைத்தொ றழூஉந்தன் மகத்துமுக நோக்கி நீரொடு நிறைந்த வீரிதழ் மழைக்கணென் மனையோ ளெவ்வ நோக்கி நினைஇ நிற்படர்ந் திசினே"

(புறம்.164)

‘ஆடை யின்றி வாடையின் மெலிந்து

கையது கொண்டு மெய்யது பொத்திக்

காலது கொண்டு மேலது தழீஇப்

பேழையு ளிருக்கும் பாம்பென உயிர்க்கும்

ஏழை யாளனைக் கண்டனம்"

(தனிப்பாடல்)

என்றோ,

'களைகணற்ற ஓர் இளஞ்சூலி, அயலூரினின்று இங்கு வந்து இவ்வூர்க் கோடியிற் கருவுயிர்க்க ஈன் வலி கொண்டு தன்னந் தனியாய் நிற்கின்றாள்' என்றோ,

‘வெள்ளத்தால் வீடிழந்த ஓர் ஏழைக் குடும்பம் தெருவில் திண்டாடி

நிற்கின்றது’

என்றோ, பிறவாறோ, ஒருவனைக் கொண்டு சொல்வித்துத் தேரப்படு வானின் மனநிலையை அறிதல்.

2. பொருள் தேர்வு

அமைச்சப் பதவிக்குத் தேரப்படுவானை, ஒரு திருநாளில் ஏழை மாந்தர்க்கெல்லாம் உணவளிக்குமாறோ, படைத் துறைக்கு வேண்டிய யானை குதிரைகளை வாங்கிவருமாறோ, பெருந்தொகைப் பணத்தை ஒப்படைத்து, அல்லது ஒரு பெருவருவாய்க் கோவிலை மேற்பார்க்கும் முதுகேள்வியாக அமர்த்தி, அல்லது பெரும்பொருள் செலவாகும் ஒரு வளர்ச்சித் திட்டத்தில் ஈடுபடுத்தி, பின்னர்க் கணக்குக் கேட்டுப் பொருட்டுறை வாய்மையறிதல்.

3. இன்பத் தேர்வு

அரசனின் தேவியரல்லாத உரிமை மகளிருள் ஒருத்தியோ, மாதவி போலும் ஆடல் பாடல்வல்ல அழகியான ஒரு கணிகையோ, காதல்