உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




501ஆம் குறள் விளக்கம்

45

திருமுகம் வரைவதுபோற் பொய்யான ஓர் ஓலைவிடுத்து, ஆய்விற்குரிய வனை நள்ளிரவில் ஓர் இடத்திற்குத் தன்னந்தனியாக வருவித்து, அல்லது ஓர் அழகிய பணிப்பெண்ணை ஏதேனுமொரு வகையில் அவனொடு தனியாகப் பழகுவித்து, அவனது ஒழுக்கத்தை யறிதல்.

4. உயிரச்சத் தேர்வு

பகைவேந்தன் பெரும்படையொடு போருக்கு வந்து நகர்ப்புறத்துத் தங்கியிருப்பதால், உடனே அவன் ஆட்சியை ஒப்புக்கொள்ள வேண்டும், அல்லது ஊரைவிட்டு ஓடிப்போதல் வேண்டும் என்றோ, பகைவேந்தன் பாளையத்திற்குட் சென்று வேய்வு பார்த்து வரவேண்டுமென்றோ, அரண்மனை வினைஞரைக் கொண்டு சொல்வித்து, ஆயப்படுவானுக்குச் சாவிற்கச்சம் உண்மையின்மையை அறிதல்.

அமைச்சன் தூதுரைத்தற்கும் உரியனாதலாலும், "இறுதி பயப்பினு மெஞ்சா திறைவற்

குறுதி பயப்பதாந் தூது"

(குறள் 690) என்று திருவள்ளுவர் கூறியிருத்தலாலும், உயிரச்சத் தேர்வும் அமைச்சனை யமர்த்துதற்கு வேண்டுவதேயாம்.

அமைச்சன் அரசனுங் குடிகளுமாகிய இருசாரார் நலத்தையும் பேணவேண்டி யிருப்பதால், பரிமேலழகர் அரசன் நலத்தையே நோக்கிக் கூறும் நால்வகைத் தேர்திறங்களும், குறைவுள்ளனவும் இயற்கைக்கு மாறானவுமாம். அறத்தேர்வு, அரசனை மட்டும் நோக்கியதாயின், மூத்தோனாகிய செங்குட்டுவனிருக்கவும் இளையோனாகிய இளங்கோவின் முகத்தில் ஆளும் பொறியுள்ளதாக உடற்குறி நூலான் கூறியதைச் சொல்லிக் கருத்தறிதலும்; அரசனையுங் குடிகளையும் நோக்கியதாயின், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் ஆராயாது கோவலனைக் கொல்வித்ததைக் கூறிக் கருத்தறிதலும்; ஆகும்.

ம்

பரிமேலழகர்க்கு முந்திய மணக்குடவரும் பரிப்பெருமாளும் ‘உயிரச்சம்’ என்ற பாடமே கொண்டிருப்பதால், “பிறரெல்லாம் இதனை 'உயிரெச்சம் எனப் பாடம் திரித்துத் தத்தமக்குத் தோன்றியவாறே உரைத்தார்” என்று பரிமேலழகர் கூறுவது பொருந்தாது. பரிதியாரும் காலிங்கருமே ‘உயிரெச்சம்' என்று பாடமோதி, அதற்கு வீடு (மோட்சம்) என்று பொருள் கொண்டனர். பிறப்பிறப்பின்றி நிலையாக உயிர் எஞ்சி நிற்பது உயிரெச்சம் என்று, பொருட்கரணியங் கொண்டதாகத் தெரிகின்றது.

"செப்ப முடையவ னாக்கஞ் சிதைவின்றி

CC

யெச்சத்திற் கேமாப் புடைத்து",

‘தக்கார் தகவில ரென்ப தவரவ

ரெச்சத்தாற் காணப் படும்",

(குறள். 112)

(குறள். 114)