உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




46

பண்பாட்டுக் கட்டுரைகள்

மனந்தூயார்க் கெச்சநன் றாகு மினந்தூயார்க்

கில்லைநன் றாகா வினை'

"1

(குறள் 456)

முதலிய குறள்கள் 'உயிரெச்சம்' என்னும் பாடத்திற்கு ஓரளவு துணை செய்யு மேனும், 'உயிரச்சம்' என்னும் பாடமே பல்லாற்றானுஞ் சிறந்ததும் உத்திக்கு ஒத்ததும் தமிழிற்கு ஏற்றதுமாகும்.

"பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்

குமரிக் கோடுங் கொடுங்கடல்"

கொள்ளுமுன்பே பாண்டியர்குடி நிலைபெற்றிருந்ததனாலும், 955ஆம் குறளிற் ‘பழங்குடி' என்பதற்குத் “தொன்றுதொட்டு வருகின்ற குடி” என்று பொருள்கூறி, "தொன்றுதொட்டு வருதல் சேர சோழ பாண்டியர் என்றாற் போலப் படைப்புக் காலந்தொட்டு மேம்பட்டு வருதல்," என்று பரி மேலழகரே எடுத்துக்காட்டியிருத்தலாலும், கி.மு. 4ஆம் நூற்றாண்டின ரான சாணக்கியர், பண்டைத் தமிழ்நூல்களினின்றே அமைச்சரைத் தேரும் நால்வகைத் தேர்வுகளையறிந்து, அவற்றிற்கு 'உபதா' என்று பெயரிட் டிருத்தல் வேண்டும். 'உபதா' என்னுஞ் சொற்கு மேலிடுதல், சுமத்துதல், கள்ளம், திருக்கு, நடிப்பு, ஆய்வு என்றே பொருள். நாற்பொருளையும் முப்பாலிற் கூறும் அறநூல்களேயன்றி, அரசியலைத் தனிப்படக் கூறும் பொருள் நூல்களும் பண்டைத் தமிழிலக்கியத்திலிருந்தமை,

CC

ஏரண முருவம் யோகம் இசைகணக் கிரதஞ் சாலம் தாரண மறமே சந்தந் தம்பநீர் நிலமு லோகம் மாரணம் பொருள்என் றின்ன மானநூல் யாவும் வாரி வாரணங் கொண்ட தந்தோ வழிவழிப் பெயரு மாள'

11

என்னும் தனிப்பாடலால் அறியப்படும். பொருள்நூலையே அர்த்தசாத்திரம் என மொழிபெயர்த்துக் கொண்டனர் வடமொழியாளர்.

வேதகாலத்திலேயே வடநாட்டாரியர் தென்னாட்டுத் தமிழரொடு தொடர்பு கொண்டிருந்தமையை, P.T. சீநிவாசையங்கார் எழுதிய 'தமிழர் வரலாறு' (History of the Tamils) என்னும் ஆங்கில நூலிற் கண்டு தெளிக.

(பக். 17-35).

துகாறுங் கூறியவற்றால், இக் குறள் முற்றுந் தமிழ்க் கருத்தே கொண்டுள்ளதென்றும், "இவ் வடநூற் பொருண்மையை உட்கொண்டு இவர் ஓதியது அறியாது, பிறரெல்லாம் தத்தமக்குத் தோன்றியவாறே உரைத்தார்.” என்று பரிமேலழகர் கூறியுள்ளது துணிச்சலான ஆரியக் குறும்புத்தனம் என்றும் அறிந்துகொள்க. இவ் வுரைவிளக்கம் என் தி.த.ம. உரையில் விடப்பட்டுப் போயிற்று.

- “செந்தமிழ்ச் செல்வி" மே 1970