உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6

அரசுறுப்பு

பல்வகைக் குடியரசு தோன்றியுள்ள இக்காலத்து அரசியல் நூலார், அரசியலமைப்பில் நாட்டை (State) உடம்பாகக் கொண்டு ஆள்நிலம் (Ter- ritory), குடிகள் (Population), அரசு (Government), கோன்மை (Sover- eignty), ஒற்றுமை (Unity) என்னும் ஐந்தை அதன் உறுப்பாக்குவர்.

செங்கோல் அல்லது கொடுங்கோல் கொண்ட கோவரசே (Monar- chy) வழங்கிவந்த முற்காலத்தில், பேரறிஞரான திருவள்ளுவர் அரசிய லமைப்பில் அரசனையே உடம்பாகக்கொண்டு,

"படைகுடி கூழமைச்சு நட்பர ணாறு முடையா னரசரு ளேறு"

(குறள். 381) என்று, படை குடி பொருள் அமைச்சு நட்பு அரண் ஆறையும் அவனுக்கு உறுப்பாகக் கூறினர். ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே அவர் கூறிய அரசின் இயல்வரையறை, இன்னும் பொருத்தமாயும் பொருள் பொதிந்ததாயு மிருப்பது, அவரின் பல்துறைக் கல்வியையும் பரந்த நோக்கையும் ஆழ்ந்த எண்ணத்தையும் கூர்த்த மதியையும், காட்டப் போதிய சான்றாகின்றது.

அரசுறுப்பு ஆறென்று குறளிற் கூறினும், உண்மையில் ஏழென்பதே ஆ சிரியர் உள்ளக் கருத்து. நாடில்லாது குடியிருக்க முடியாததாகலின், நாட்டைக் குடியுள் அடக்கியே அரசுறுப்பு ஆறென்றார். நாடு என்பது ஒரு தனியுறுப்பாகவே, நாடு என்னுந் தலைப்புக்கொண்ட 74ஆம் அதிகாரத்தில் அவர் கூறியிருத்தல் காண்க.

குடியின்றி நாடிருக்கலாம். ஆயின் நாடின்றிக் குடி இருக்க முடியாது. இவ் வெளிய வுண்மையைத் திருவள்ளுவர் அறியாதிருந்திருப்பின், திருக்குறளையே இயற்றியிருக்க முடியாது. மேலும், நாடு என்றே ஒரு தனியதிகாரம் பின்னர் வகுத்திருப்பதால், முன்னுக்குப் பின் முரணாகவும் முடியும். ஓரதிகாரம் முழுவதையும் தலைப்புடன் கவனியாது போவதும், இயலுஞ் செயலன்று.

திருவள்ளுவமாலையிற் போக்கியார் பாடல்,

CC

அரசிய லையைந் தமைச்சிய லீரைந்

துருவல் லரணிரண்டொன் றென்கூ - ழிருவியல் திண்படை நட்புப் பதினேழ் குடிபதின்மூன் றெண்பொரு ளேழா மிவை”