உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




48

பண்பாட்டுக் கட்டுரைகள்

என்றே, பொதுவாக வெளியிடப்பெற்று வந்திருக்கின்றது. "ஆறும் உடையான் அரசருள் ஏறு" என்று திருவள்ளுவர் எண்வரம்பிட்டுக் கூறி யிருப்பதனாலும், அரண் நாட்டின் கூறாதலாலும், நாடு முழுதும் அரணமையவுங் கூடுமாதலாலும், நாட்டை அரணுள் அடக்கிப் போக்கியார் அங்ஙனம் பாடினரென்று, பெரும்பாலர் கருதலாம். ஆயின், சேலங்கல்லூரி மேனாள் தமிழ் விரிவுரையாளர் திரு. நடேச அந்தணனார் இயற்றிய திருக்குறள் திறவு பொருட்பால் இறைமாட்சி என்னும் அரிய ஆராய்ச்சி நூலில், போக்கியார் பாடலாக,

CC

'அரசிய லையைந் தமைச்சிய லீரைந்

-

துரைநா டரண்பொரு ளொவ்வொன் படையிரண்டு நட்புப் பதினேழ்பன் மூன்று குடியெழுபான் றொக்கபொருட் கூறு

றுரைசால்

என்னும் அருமையான பாவேறுபாடே காட்டப்பட்டுள்ளது. இதுவே சரியான பாடமாக இருத்தல் வேண்டும்.

திருக்குறட் பதிப்புகளெல்லாவற்றிலுமுள்ள பாடத்தில், "இருவியல்" என்னும் தனிச்சீர் இலக்கணப்படி ‘ஈரியல்' என்றிருத்தல் வேண்டும். அதைச் செய்யுள் திரிபென்று கொள்ளினும், அக் கொள்கை அத்துணைச் சிறந்ததாகத் தோன்றவில்லை. ஆதலால், திரு. நடேச அந்தணனார் கொண்ட பாடத்தையே இனிப் பதிப்பிப்போரெல்லாம் மேற்கொள்வாராக.

திருவள்ளுவர் கூறிய அரசுறுப்புகளுள், கூழ் (பொருள்), நட்பு என்னும் இரண்டும் மிக முதன்மையாகக் கவனிக்கத்தக்கவை, இந்தியா உலகப் பெருநாடுகளுள் ஒன்றாயிருப்பினும், தனக்குப் போதிய உணவுப் பொருளின்மையால், அமெரிக்காவிற்கும் ஏனை நாடுகட்கும் சென்று கையேந்த வேண்டியுள்ளது. சில பெருநாடுகட்குப் போதிய உணவுப் பொருளிருப்பினும், கைத்தொழிற் கருவிப் பொருட்குப் பிறநாடுகளைச் சார்ந்திருக்க வேண்டிய நிலைமையுள்ளது.

இனி, அமெரிக்காவும் இரசியாவும் எத்துணை வல்லரசுகளா யிருப்பினும், ஒன்றிய நாட்டினங்கள் (United Nations) என்னும் அமைப்பு ஏற்பட்டபின்னும், அதற்குள்ளேயே; வட அத்திலாந்திய உடன்படிக்கை யமைப்பு (N.A.T.O.) என்றும், தென்கிழக்கு ஆசிய உடன்படிக்கை யமைப்பு (S.E.A.T.O.) என்றும், நடுவ உடன்படிக்கையமைப்பு (C.T.O.) என்றும், இன்னும் பிறவாலும், எத்துணையோ கூட்டு நட்புகளைத் தோற்றுவித்துக் கொண்டுள்ளன. இனி, ஆப்பிரிக்க நாடுகளும் அரபிய நாடுகளும் பிறவும் தம்முட் செய்துகொண்டிருக்கும் நட்புடன்படிக்கைகளைப் பற்றிச் சொல்லவே வேண்டுவதில்லை. இங்ஙனம், ஒற்றுமைக்காக ஏற்பட்ட உலகமைப்பு 'ஒன்றா நாட்டினங்கள்' (Disunited Nations) என்று சொல்லு மாறே, உலக நாடுகளின் போக்கு இருந்துவருகின்றது.