உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அரசுறுப்பு

49

திங்களையடைந்து தன் அறிவியல் (Scientific), கம்மியல் (Tech- nological) வளர்ச்சியின் தலைத்திறத்தைத் தெரிவித்துக்கொண்டிருக்கும் அமெரிக்காவும், எவ்வெந் நாட்டொடு எவ்வெவ்வகையில் நட்புப் பூணலாமென்று சூழ்வதிலும், சூழ்ச்சிமுடிபை நிறைவேற்றுவதிலுமே, கண்ணுங் கருத்துமாயிருந்து வருகின்றது. இவ் விருபதாம் நூற்றாண்டிலும், ஒரு மாபெரு வல்லரசு,

வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல்'

11

(குறள்.471)

என்பதற்கேற்ப, தன் வாழ்விற்குத் துணைவலியை இன்றியமையாததாகக் கருதின், ஈராயிரம் ஆண்டிற்கு முற்பட்ட பழங்காலத்தில், நட்பு எத்துணைச் சிறந்த அரசுறுப்பா யிருந்திருத்தல் வேண்டுமென்பதை எண்ணிக் காண்க. இனி, ஒரு நாட்டின் நிலைமை, சூழ்நிலைக்கேற்ப அடிக்கடி மாறிக் கொண்டு வருவதால், கோன்மை என்பது நிலைத்தவுறுப்பன்று.

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் இல்லது நாடு"

(குறள்.735)

என்று திருவள்ளுவர் கூறியிருப்பதால், ஒற்றுமை என்பதும் அவர்க்குத் தெரியாததன்று.

இன்று மக்கள்தொகை மட்டிற்கு மிஞ்சிப் பெருகியிருப்பதாலும், தமிழம் என்பது மொழி இலக்கியம், பண்பாடு முதலியவற்றில் தனிப் பட்டதாதலாலும், எதிர்காலத் தமிழக அரசு புத்தம் புதிய முறையில் அமைதல் வேண்டும். அதுவும், திருவள்ளுவ நெறிப்பட்டதே யென்பது, மண்ணில் விண் என்னும் நூலில் விரிவாக விளக்கப்பெறும்.

- "தமிழம்" 1.11.1972