உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாவினம்

“தரவும் போக்கும் பாட்டிடை மிடைந்தும்

ஐஞ்சீர் அடுக்கியும் ஆறுமெய் பெற்றும்

வெண்பா வியலான் வெளிப்படத் தோன்று"

51

(தொல். சொல். 148)

வதாயும் பற்பலவாற்றான் மிக்குங் குறைந்துந் திரிந்தும் வருவதாகும். கொச்சகக்கலியுள் ஒருவகையே பரிபாடலென்க.

இற்றைத் தமிழ்நூல்கட்கெல்லாம் முன்னூலாகிய தொல்காப்பியத்தில் பாவினம் கூறப்படாவிடினும், அவற்றின் தோற்றத்திற்குக் காரணமான இயல்களை ஆங்காங்குக் காணலாம்.

துறை: துறையென்பது தொல்காப்பியத்துள், "வழக்கியல் மருங்கின் வகைபட நிலைஇப் பரவலும் புகழ்ச்சியும் கருதிய பாங்கினும் முன்னோர் கூறிய குறிப்பினும் செந்துறை வண்ணப் பகுதி வரைவின் றாங்கே

என ஒருவகைப் பாடாண் செய்யுட்குப் பெயராக வந்துள்ளது. அது செந்துறைப் பாடாண் பாட்டெனப்படும். அது கடவுள் வாழ்த்துப்பற்றி வரும் ஒருவகைக் கலிப்பா. வண்ண மென்பதே கலிப்பாவையுங் கடவுள் வாழ்த்தையு முணர்த்தும்.

"மூவா முதலா" என்னும் சீவகசிந்தாமணிக் கடவுள் வாழ்த்துச் செய்யுளை, முன்னோர் கூறிய குறிப்பின்கண் வந்த செந்துறைப் பாடாண் பகுதி யென்றனர் நச்சினார்க்கினியர்.

பாடாண்டிணை தெய்வம் பராவல், மக்களேத்தல் என்னும் இருபாற் பட்டு வரும். தெய்வம் பராவல் பெரும்பாலும் கலிப்பாவாலேயே வரும். தெய்வத்தின் பல குணங்களையும் திருவிளையாடல்களையும் வடிவுகளை யும் வண்ணித்துப் புகழ்தற்குக் கலியுறுப்புகள் போலப் பிற பாக்கள் சிறவாமை காண்க.

ஒத்தாழிசைக்கலி இருவகையென்று கூறி அவற்றுள் ஒன்று, "தேவர்ப் பராஅய முன்னிலைக் கண்ணே

என்றார் தொல்காப்பியர்.

11

(தொல். சொல். 133)

சிந்தாமணியினுஞ் சிலப்பதிகாரத்தும் தெய்வம் பராவுஞ் செய்யுள்க ளெல்லாம் ஒருபோகும் கொச்சகமுமாகக் கலிப்பாக்களாகவே வந்தன. இவ் வழக்குப் பற்றியே தெய்வம் பராவும் கொச்சகங்கள் தேவபாணி, பெருந் தேவபாணி யெனப்படுவன.

கலம்பகத்திற் கடவுள் வாழ்த்துக் கொச்சக ஒருபோகாற் கூறப் படுவதுங் காண்க. அராகம், அம்போதரங்கம் முதலிய கலியுறுப்புகள் கடவுள் வாழ்த்திற்கே சிறப்பாயுரியன.

இனி, துறையென்பது புறத்திணையியலில் திணைப் பிரிவாகவுங் கூறப்பட்டுள்ளது.