உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




52

அதனுரையில்,

பண்பாட்டுக் கட்டுரைகள்

"மக்களும் மாவும் முதலியன சென்று நீருண்ணுந் துறைபோலப் பலவகைப்பட்ட பொருளும் ஒருவகைப்பட்டு இயங்குதலாகு மார்க்க மாதலிற் றுறையென்றார், எல்லாவழியு மென்பதனை எல்லாத் துறையுங் காவல் போற்றினார் என்பவாகலின். எனவே, திணையுந் துறையுங் கொண்டாராயிற்று. அகத்திணைக்குத் துறை யுட்பகுதிகளெல்லாம் விரித்துக் கூறிப் பின்னும் பன்முறையாற் பரந்துபட்டு வரம்பிகந்தனவற்றையுந் தொகுத்துத் துறைப்படுத்துக் கூறுக என்றற்குச் செய்யுளியலுள் துறை யென்பது உறுப்பாகக் கூறினார். புறத்திணைக்கு அங்ஙனம் பரந்து விரித்தோதாது தொகுத்து இலக்கணஞ் செய்தாராயினும் அவையும் அவ்வாறே பல பொருட்பகுதியும் உடையவென்று உணர்த்துவதற்குத் துறையெனப் பெயராகக் கொடுத்தார். இதனானே அகப்பொருட் பகுதி பலவாயினும், ஒரு செய்யுட் பல பொருள் விராஅய் வரினும் ஒரு துறை யாயினாற்போலப் புறத்திணைக்கும் அவ்வப் பொருட்பகுதியும் ஒரு துறையாதலும் ஒரு செய்யுளுட் பல துறை ஒருங்கு வந்தும் ஒரு துறைப் படுதலுங் கொள்க”

"அவ்வம் மாக்களும் விலங்கு மன்றிப் பிறவவண் வரினும் திறவதின் நாடித் தத்தம் இயலான் மரபொடு முடியின்

அத்திறம் தானே துறையெனப் படுமே"

(தொல். செய். 200)

என்பது செய்யுளியல். இதனால் துறையென்பது பொதுவாய்த் திணைப் பிரிவும் சிறப்பாய் அகத்திணைப்பிரிவு மென்பது பெற்றோம்.

அகத்திணைக்குச் சிறந்த கோவை நூல்களுள் அகப்பொருட் டுறைகளெல்லாம் கலிப்பாவாலேயே கூறப்படுவன. இதனாற் கலித்துறை யெனப் பெயர் பெற்றது. கலியென்பது செய்யுளையும் துறை யென்பது அகப்பொருட் பிரிவையு முணர்த்தும். கலிப்பாவாற் கூறப்படும் அகப் பொருட்டுறை யென்பது விரிந்த பொருள்.

கலிப்பாவால் அகப்பொருள் கூறப்படுதலை, "யாப்பினும் பொருளினும் வேற்றுமை யுடையது"

என்பதற்குத் தேவபாணியும் காமமுமேயன்றி வீடும் பொருளாமென்பது ஆசிரியர் கருத்தாயிற்று" என்று நச்சினார்க்கினியர் கூறுவதானும், கலித்தொகையானும், கலியின் திரிபாகிய பரிபாடல்,

"கொச்சகம் அராகம் சுரிதகம் எருத்தொடு

செப்பிய நான்கும் தனக்குறுப் பாகக் காமங் கண்ணிய நிலைமைத் தாகும்"

எனப்படுதலானும்,