உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாவினம்

கொள்க.

53

தலைவனுந் தலைவியும் உறழ்ந்து கூறும் உறழ்கலியானும் அறிந்து

ஆகவே, துறையென்பதற்குரிய செந்துறைப் பாடாண் பகுதி, அகப்பொருட்டுறை என்னும் இருபொருளினும் பெரும்பான்மை வழங்குஞ் செய்யுள் கலியே யென்றும், அகப்பொருளில் வரும் கோவைச் செய்யுள் அளவொத்த நெடிலடி நான்கென்றும் அறிந்துகொள்க.

நச்சினார்க்கினியர் செந்துறைப் பாடாண் பகுதியாகக் கூறிய சிந்தா மணிக் கடவுள் வாழ்த்துச் செய்யுளும் நெடிலடி நான்காகவே நிகழ்வது காண்க.

தாழிசை

“இனித் தாழிசை யென்பது கலிப்பாவுறுப்பென்பது வெள்ளிடை. அது தாழம்பட்ட ஓசையாய் வருதலாற் றாழிசையெனப்பட்டது. அது தரவகப்பட்ட மரபினதாய் ஒரு பொருண்மேல் மூன்றடுக்கிவரும். கொச்சகக் கலியாயின் தனித்தும், பலவாயும், பிறவுறுப்பின்றியும் வரும். மூன்று தாழிசை ஒத்துவரின் ஒத்தாழிசைக் கலியாம். ஒத்தாழிசையை ஒ+தாழிசை யென்று பிரித்து ஒத்தாழிசை யெனக் கூறாது, ஒத்து + ஆழிசை என்று பிரித்து ஒத்து ஆழ்ந்த ஓசையென்றார் நச்சினார்க்கினியர்.

ஒரு தொடர்புபட்ட பொருளைக் கூறுமிடத்து, ஒத்த நியாயங் களையும் நிகழ்ச்சிகளையுங் கூறுதற்குத் தாழிசை போலச் சிறந்த உறுப்புப் பிறிதிலது. விருத்தம்

இனி விருத்த மென்பது யாதோவெனின் அது ஒருவகை யாப்பாம். அது தமிழில் மண்டில மெனப்படும்.

CC

ஒத்தா ழிசையும் மண்டில யாப்பும்

குட்டமும் நேரடிக் கொட்டின வென்ப"

என்னுஞ் சூத்திரவுரையில்,

"நாற்சீரடி முரற்கைபடத் துள்ளி வருதலே யன்றித் தாழம்பட்ட வோசை பெற்றும் வருமென்றார். இனி நாற்சீரடியாய் வருமாசிரியமும் வெண்பாவும் ஈற்றயலடியும் ஈற்றடியும் முச்சீராய் வருமென முன் விதித்தவை ஒருகால் நாற்சீராயும் வருமென்றற்கு மண்டில யாப்பென்றார். அது மண்டில வாசிரியப்பாவும் மண்டில வெண்பாவுமாம்.

எனவும்,

"வேரல் வேலி வேர்க்கோட் பலவின் சார னாட செவ்வியை யாகுமதி யாரஃ தறிந்திசி னோரே சாரற்

சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கியா ங்கிவ ளுயிர்தவச் சிறிது காமமோ பெரிதே"

(குறுந். 18)