உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




54

பண்பாட்டுக் கட்டுரைகள்

'அறையருவி யாடாள் தினைப்புனமுங் காவாள் பொறையுயர் தண்சிலம்பிற் பூந்தழையுங் கொய்யா ளுறைகவுள் வேழமொன் றுண்டென்றா என்னை மறையறநீர் வாழிய மையிருங் குன்று"

எனவும் மண்டலித்து வந்தன” என்றார் நச்சினார்க்கினியர். மண்டலித்தல் வட்டமாதல். அது மண்டலம் என்னும் தொகைச் சொல்லிற் பிறந்த வினை. மண்டலம் மண்டிலமென மருவியும் வரும்.

மண்டலிப்பாம்பு, சுரமண்டலம், திங்கண்மண்டிலம், மண்டிலச் செலவு (குதிரைச்சாரி) முதலியன வட்டமென்னும் வடிவுப் பொருளில் வந்தன. மண்டலம், வட்டமென்னும் சொற்கள் circle என்னும் ஆங்கிலச் சொற்போல இடப்பகுதிகளையுங் குறிக்கும்.

"ஜயங்கொண்ட சோழமண்டலம்"

"இந்த வட்டத்திற்குள் அவற்கெதிரில்லை”

வட்டமென்பது வட்டகை வட்டார மென்றும் திரியும். மருத்துவ முறையில் நாற்பத்தெண்ணாட் பகுதி ஒரு மண்டல மெனப்படும். காலமு மிடத்தோ டொக்கும்.

இனி மண்டலம், வட்டமென்னும் சொற்கள் முழுமைப் பொருளினும் வழங்கும். திங்கள் வட்டமாயிருக்குங்கால் பதினாறு கலைகளும் நிரம்பி யிருத்தல் காண்க. ஆங்கிலத்தும் round என்னும் சொல் whole, complete எனப் பொருள்படும். உலக வழக்கில் முழுமைப் பொருளில் 'வள்ளிது' என்றோர் சொல் வழங்கிவருகின்றது. அது வட்டம் என்னும் சொல்போல வள் என்னும் பகுதியினின்று பிறந்ததாகும். வள்ளிதாய்ச் செலவாயிற்று என்றால் முழுதும் செலவாயிற்றென்பது பொருள். வள்ளிசாய் என்பது கொச்சைப் போலி.

மண்டலம் என்னுந் தொகைச்சொல், மண் + தலம் என விரியும். பண்டைத் தமிழர் கடற்செலவில் தேர்ந்திருந்தாராதலின், உலகெங்கும் கலத்திற் சென்று நிலம் வட்டமாயிருத்தலை நன்கறிந்திருந்தனர். பண்டையுலகத்தை ஏழ் தீவாகப் பகுத்துக் கூறினதும் இதை வற்புறுத்தும். தீவு - கண்டம். வடவைக் கனலை (Aurora Borealis) அறிந்திருந்ததும் மற்றோராதாரம். இலத்தீன் (Latin), ஆங்கிலம் முதலிய மொழிகளிற் கடற்றுறை பற்றிய சொற்கள் பல செந்தமிழாயிருப்பதும் இதற்குச் சிறந்ததோர் சான்றாம்.

நாவாய் கலம்

வாரணம்

கரை

L. navis, E. navy =

E. galleon

கடற்படை.

L. marina. Skt. 600TIT

வருணா

E. shore. sh

=