உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




catamaran

பாவினம்

55

படகு

E. bark. r =

d.c.f.Coorg = குடகு

கட்டுமரம்

சோழி

நங்கூரம்

கப்பல்

ship

shell

anchor

இது நிற்க. இனி நாற்சீரால் நிரம்பிவரும் அளவடியை மண்டில யாப்பென்றார்.

"நாற்சீர் கொண்ட தடியெனப் படுமே'

(தொல். பொருள். 344)

என்பது சூத்திரம். இதனால் இயற்சீரால் துள்ளலிசைபற்றி அளவடி நான்காய்த் தனித்து வருங் கொச்சகக் கலியுறுப்புக் கலிமண்டிலமாயிற்று. மண்டிலம் பிற்காலத்தில் விருத்தமென்னும் வடமொழிப் பரியாயப் பெயரால் வழங்கலாயிற்று. ஆகவே துறை, தாழிசை, விருத்த மென்னும் மூவகைப் பாவினமும் கலிப்பாவானமை பெறப்பட்டது. இவற்றைப் பிற்காலத்தார் பொதுவாகக் கொண்டு, வரம்பு கடந்து வரூஉம் கொச்சகக் கலிகளையெல்லாம் ஒருபுடை யொப்புமைபற்றி ஒவ்வோர் பாவிற்கும் மும்மூன் றினமாகப் பகுத்துரைத்தார்.

ரு

கலிப்பாப் பலவகை யடிகளானும் உறுப்புக் குறைந்தும் மிக்கும் மென்பது முன்னரே கூறப்பட்டது. அதினுங் கொச்சகக் கலியோ கலிப்பாவிற் கின்றியமையாத துள்ளலிசையுங் கெட்டு வருவதாகும். கலித்தல் துள்ளல்.

இரண்டடி அளவொத்துச் செந்துறைப் பாடாண் பாட்டாய் வருவதை அடித்தொகைபற்றிக் குறட்கினமாக்கி வெண்செந்துறை யென்றனர். எ-டு :

66

ஆத்தி சூடி யமர்ந்த தேவனை

ஏத்தி யேத்தித் தொழுவோம் யாமே.

""

3 அடிமுதல் 7 அடிவரை முன்நீண்டு பின்குறுகிவரும் செந்துறைப் பாடாண் பாட்டை ஈறு குறைதல்பற்றி வெண்பாவிற் கினமாக்கி வெண்டுறை என்றனர்.

4 அடியாய் எருத்தடி நைந்தும், குட்டம் பட்டும், இடை மடக்கியும் ஆசிரிய வியலான் வரும் செந்துறைப் பாடாண் பாட்டை ஆசிரியத் துறை யென்றனர். இடைமடக்கல் அம்மானைக் கியல்பென்க.

கோவையில் வரும் கலித்துறைச் செய்யுளை எழுத்தெண்ணிக் கட்டளைக் கலித்துறை யென்றனர்.

குறளடி நான்காய் வரும் செந்துறைப் பாடாண்பாட்டை அடிவகை பற்றி வஞ்சித்துறை யென்றனர்.

கலிப்பாவில் அம்போதரங்க வுறுப்புச் சிந்தடி குறளடிகளும்

பெற்றுவரும்.