உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




56

பண்பாட்டுக் கட்டுரைகள்

இனித் தாழிசைக்குச் சிறப்பிலக்கணம், தாழம்பட்ட ஓசையாய் அளவொத்து மூன்று அடுக்கி வருதல். இரண்டடியாய் இறுதியடி குறைந்து வருவதைக் குறட்டாழிசை யென்றும், மூன்றடியாய் ஈற்றடி சிந்தடியாய் வருவதை வெண்டாழிசை யென்றும், மூன்று நேரடியாய் அளவொத்து மண்டில வாசிரியம்போல் வருவதை ஆசிரியத்தாழிசை யென்றும், குறளடி நான்காய் வருவதை வஞ்சித்தாழிசை யென்றுங் கூறினர். இவையெல்லாம் ஒருபொருண்மேல் மூன்றடுக்கியும் தனித்தும் வருவனவாம்.

இனி, விருத்தத்திற்குச் சிறப்பிலக்கணம் அளவொத்த நாலடியாய் மண்டலித்து வருதல்; அதாவது நிரம்பி வருதல்.

3 அடியாயும் 4 அடியாயும் மண்டலித்து வெண்பாவியலிற் றனிச் சொற்பெற்று வருவதை வெளிவிருத்த மென்றும், கலிவிருத்தமும், கலித்துறையும் அளவடியாயும் நெடிலடியாயும் வருதலின் அவற்றுக்கு மேல் கழிநெடிலடியாய் ஆசிரியத் தளைதட்டு வருவதை ஆசிரிய விருத்த மென்றும், வஞ்சிப்பாவிற்கு நிரம்பின அடி சிந்தடி யாதலின் சிந்தடியாய் வருவதை வஞ்சிவிருத்த மென்றுங் கூறினர்.

கலிப்பாவில் அராக வுறுப்புக் கழிநெடிலடியானும் வரப்பெறும். "அறுசீ ரடியே ஆசிரியத் தளையொடு நெறிபெற்று வரூஉம் நேரடி முன்னே”

"எழுசீ ரடியே முடுகியல் நடக்கும்

என்பவை சூத்திரம். ஆசிரிய விருத்தம் பிற்காலத்தில் பிறதளையும் தட்டு வந்தது.

விருத்தங்கட் கெல்லாம் நாலடி யளவொத்திருத்தல் பொது விலக்கண மாம். அடிகள் பலவகைப்படுமேனும் நாற்சீரடி அளவாயினாற்போல, பாக்கள் பற்பல அடித்தொகை பெறுமேனும் நாலடிச் செய்யுள் அளவாயிற்று. மோனை எதுகை முதலிய தொடைகட்கும் இசைநிறைவிற்கும் அடியுள் நாற்சீரடி சிறத்தல் போலச் செய்யுளில் நாலடிச் செய்யுள் சிறப்பதாகும். இதனானே வெண்பா பலவடியாய் வருமேனும் நாலடி வெண்பா பெருவழக்காயிற்று. பிற்காலத்துச் செய்யுள்களெல்லாம் பெரும்பாலும் நாலடியாலேயே நடப்பவையாயின. நாற்சீரால் அடிநிரம்பி மண்டில மாயினாற்போல, நாலடியாலும் செய்யுள் நிரம்பி ஒருவகை மண்டில மாயிற்றென்க.

விருத்தங்களில், 26 வரை எழுத்துப்பெற்று வருபவற்றை விருத்த மென்றும், அதற்குமேல் தாண்டி வருபவற்றைத் தாண்டக மென்றும், இவை சந்தமாக வரின் சந்தவிருத்தம், சந்தத் தாண்டக மென்றுங் கூறினர்.

இங்ஙன மெல்லாம் ஒரு பாவிற்குரிய பலவுறுப்புகளைப் பிற பாக்கட் கினமாக்கியதால், ஓரினம் பிறவினமாயும், ஒரு செய்யுள் பல பாவிற்கின