உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாவினம்

57

மாயும் வருதற்கேற்று, இன்ன செய்யுளென்றொன்றைத் துணியாது மயங்குதற் கிடனாயிற்று.

"மூவா முதலா வுலகமொரு மூன்று மேத்தத்

தாவாத வின்பந் தலையாயது தன்னி னெய்தி

யோவாது நின்றகுணத் தொண்ணிதிச் செல்வ னென்ப தேவாதி தேவனவன் சேவடி சேர்து மன்றே”

(சீவக.1)

என்னும் சிந்தாமணிக் கடவுள் வாழ்த்துச் செய்யுளுரையில், நச்சினார்க் கினியர்,

66

'இத் தொடர்நிலைச் செய்யுள் தேவர் செய்கின்ற காலத்திற்கு நூல் அகத்தியமும் தொல்காப்பியமு மாதலானும்... அகத்தியத்தின் வழிநூல் தொல்காப்பிய மாதலானும், பிறர் கூறிய நூல்கள் நிரம்பிய இலக்கணத்தன அன்மையானும், அந் நூலிற் கூறிய விலக்கணமே இதற் கிலக்கண மென்றுணர்க.

ச் செய்யுள் முன்னோர் கூறிய குறிப்பின்கண் வந்த செந்துறைப் பாடாண் பகுதியாம்.

னி, இத் தொடர்நிலைச் செய்யுளை இனமென்ப. அந் நூல்கள் இனமென்று காட்டிய வுதாரணங்கடாம் அவர் சேர்த்த அவ்வப் பாக்கட்கே இனமாகாது, ஒழிந்த பாக்கட்கும் இனமாதற்கு ஏற்றலானும், துறையை விருத்தமாகவும், தாழிசையை விருத்தமாகவும், ஓதுதற்கு அவை யேற் றமையானும், "மூவா முதலா” என்னுங் கவி முதலியன தாழம்பட்ட ஓசையான் விருத்தமாகவும், சீர் வரையறையானும் மிகத் துள்ளிய வோசையானும் துறையாயுங் கிடத்தலின், இதனை விருத்தக் கலித்துறை யென்னல்வேண்டும். அது கூறவே துறையும் விருத்தமுமெனப் பகுத் தோதிய இலக்கணம் நிரம்பாதா மாகலானும் இனமென்றல் பொருத்தமின்று. இச் செய்யுள்களின் ஓசை வேற்றுமையும் மிக்குங் குறைந்தும் வருவனவும் கலிக்கே யேற்றலிற் கொச்சகமென் றடங்கின" எனக் கூறியுள்ளார்.

இங்ஙனமே கலிவிருத்தம் துள்ளலிசையாற் கலியினமாயும், சீர்வகையானும் அடிவகையானும், நிலைமண்டில வாசிரியமாயும், நாலசைச் சீர்கொள்ளின், குறளடி வஞ்சிப்பாவாயும் கூறுதற் கேற்றுவருதலும், கட்டளைக்கலிப்பாத் துள்ளலிசையாற் கலிப்பாவாயும் சீர்வகையானும் அடிவகையானும் ஆசிரிய விருத்தமாயுங் கூறுதற் கேற்றுவருதலும் கண்டுகொள்க.

இதுகாறுங் கூறியவற்றால், பாவின மூன்றுந் தமிழ் யாப்பேயென்றும், அவை கொச்சகக்கலியின் திரிபென்றும், பின்னூலார் அவற்றைப் பன்னிரு பாவினமாகப் பகுத்துக் காட்டினரென்றும், சாலை, பண்ணை முதலிய தமிழ்ச் சொற்கள் மறைந்து ரோடு (இங்கிலீஷ்), ஜமீன்தார் (இந்துஸ்தானி) முதலிய அயற்சொற்கள் வழங்கினாற்போல, மண்டிலமென்னும் தென்சொல்