உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




58

பண்பாட்டுக் கட்டுரைகள்

மறைந்து விருத்தமென்னும் வடசொல் வழங்கிற்றென்றும், இலக்கணம் நிரம்பிய பாவியற்றும் அருமை நோக்கிச் சங்ககாலத்திற்குப் பின்னோர் எளிய யாப்பான இனங்களை யியற்றினரென்றும், அவற்றுட் சிறப்புப்பற்றி மண்டிலயாப்புப் பெருவழக்காயிற்றென்றும் தெள்ளிதின் அறிந்துகொள்க.

வடமொழி விருத்தம் குறளடியானும் வருமேனும், விருத்தமல்லது வேறியாப்பு ஆண்டின்மையானும், அவை பெரும்பாலும் தமிழோ டொப்புமை யுடைமையானும், பிற்றைத் தமிழ் யாப்பில் விருத்தமே பெருவழக் கானமையானும், தமிழியற்கெல்லாம் தகாது வடநூல்வழி கற்பிக்குமாறு அத்துணை இயைபு அவ் விருமொழிக்கும் ஆனபின்னர் மண்டில மென்னும் பெயர் மறைந்து விருத்தமென்னும் பெயர் வேரூன்றிய தென்க.

- “செந்தமிழ்ச் செல்வி" மடங்கல் 1933