உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




8

அகத்தியர் ஆரியரா? தமிழரா?

மக்கள் முதன்முதல் தோன்றினவிடம் இந்துமகா சமுத்திரத்தில் ஒரு காலத் தமிழ்ந்துபோன நிலப்பரப்பே (Lemuria) என்பது, Hackel, Slater, Thurston முதலிய மேனாட்டுப் பண்டிதர்களின் உய்த்துணர்வு. திருநெல் வேலிக்குத் தெற்கே ஒரு பெரிய நிலப்பரப்பு (குமரிநாடு) முற்காலத்தி லிருந்ததென்பது தொல்காப்பியம், சிலப்பதிகாரம், புறநானூறு, கலித்தொகை, திருவாசகம், சிவதருமோத்தரம், கந்தபுராணம் முதலிய நூல்களால் அறியக் கிடக்கின்றது. அந் நிலப்பரப்பில் பேசப்பட்ட மொழியே உலக முதன்மொழி யென்றும், அதினின்றும் கிளைத்தவையே ஏனைய மொழிகளெல்லா மென்றும் Hackel பண்டிதர் மானிக்கிறார்.

உலகத்தில் மகன் தோன்றினது குரங்கினின்றென்பது Darwin, Hackel முதலியோர் கருத்து. அஃறிணை உயிர்களில் மனிதனுக்கு அடுத்தது குரங்கென்பது யாவர்க்கும் தெரிந்த செய்தி. குரங்குகளிற் சில சிறப்பறிவுள்ள இனங்கள் ஆதியில் தென்னாட்டில் இருந்ததாக இராமா யணத்தாற் றெரிய வருகின்றது. இதுபற்றியே Darwin முதலியோர் கருத்தும் எழுந்ததாகும். தமிழிலும் குரங்கு வானரமென்று சொல்லப்படும். வால்+நரம்= வானரம், வாலையுடைய மனிதனென்பது பொருள். ஆனால் குரங்கி னின்றும் உண்டானானென்பது தவறான கொள்கையே.

குமரிநாடு தமிழ்நாடாதலாலும், அதில் பேசப்பட்டது தமிழாதலாலும் தமிழரே முதன் மக்கள் வகுப்பினரென்றும், தமிழே முதன்மொழி யென்றும் பெறப்படும்.உலகத்தில் மக்களுண்டான காலமாவது தமிழுண்டான காலமாவது இதுவென வரையறுத்துக் கூற ஏலாதவாறு அத்துணைத் தொன்மைத்தாயிருக்கின்றது. ஒரு மதிப்பாய்ச் சொல்லுவதானால் கி.மு. 10,000 என்று சொல்லலாம்.

மக்கள் பல்கினவுடன் பலமுறை கூட்டங் கூட்டமாக வடமேற்கே சென்று மேலாசியாவிற் குடியேறினதாகத் தெரிகின்றது. பைபிள் என்னும் கிறிஸ்தவ மறையில் ஆதியாகமத்தில்(கி.மு. 5000) மேலாசியாவில் கிளர்ந்த ஒரு பெரு வெள்ள வரலாறு கூறப்பட்டுள்ளது. அதன்பின்,

"பூமியெங்கும் ஒரே பாஷையும் ஒரே விதமான பேச்சும் இருந்தன. ஜனங்கள் கிழக்கேயிருந்து பிரயாணம் பண்ணுகையில் சிநேயார்