உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




60

பண்பாட்டுக் கட்டுரைகள் தேசத்திலே சமபூமியைக் கண்டு அங்கே குடியிருந்தார்கள்." (ஆதி. 11 : 1, 2) என்றிருக்கின்றது. இதிற் குறிக்கப்பட்டது தமிழர் வடமேற்கே சென்ற பல செலவுகளில் ஒன்றாதல் வேண்டும்.

காலஞ் செல்லச் செல்லப் பலவகைத் திரிபுகளினால் தமிழினின்றும் பலவகை மொழிகள் கிளைத்தன. இந்து தேசத்தில் தெற்கினின்றும் வடக்கே போகப்போகக் கொடுந்தமிழாயும் கிளைமொழியாயு மிருக்கும். பின்பு மேற்கே செல்லச் செல்லத் தனிமொழிகளாய் மாறிவிடும். ஆயினும் ஆயிரக்கணக்கான தமிழ்ச்சொற்கள் மாறாமலே யிருக்கும். தமிழர் வடமேற்கே போய்க் குடியேறினர் என்பதற்கு இதுவும் ஓர் ஆதாரமாகும். இதை யறியாதார் வடநாட்டு மொழிகளிற் பல தமிழ்ச்சொற்களுண்மை பற்றித் தமிழர் வடக்கேயிருந்து வந்தவரெனத் தடுமாறி யுரைப்பர்.

எல்லா மொழிகளும் இயற்கை, இயற்கையி லியற்கை, செயற்கை, செயற்கையிற் செயற்கை என நாற்பாற்படும். அவற்றுள் தமிழ் ஒன்றுமே இயற்கையி லியற்கை. தெலுங்கு கன்னடம் முதலியவை இயற்கை. எபிரேயம், இலத்தீன் முதலியவை செயற்கை. சமற்கிருதம் ஒன்றும் செயற்கையிற் செயற்கை.

மேனாட்டு அரசுகள் எல்லாவற்றுக்கும் முந்தியது யூதம்(the Jewish). அதற்குப் பிந்தியது பாபிலோனியம். பாபிலோனில் நாகரிகத்தைப் பரவச் செய்தவர் சுமேரியர் என்னும் தமிழ் வகுப்பாரென்று பிரித்தானியப் பொருட்காட்சிச் சாலையிலிருந்த ஹால் (Hall) என்பவர் கண்டுபிடித்திருக் கின்றார். சுமேரியர் நாகரிகத் தமிழரும் அவர்க்கு முன்சென்ற ஏனையோர் அநாகரிகத் தமிழருமாவர். பாபிலோனியத்திற்குப் பிந்தியது கிரேக்க ஆரியவரசு.

வடமொழியாரியர் இந்து தேசத்தில்(கி.மு. 3000) குடியேறினபோது வடுகு மட்டும் வடநாடுகளில் வழங்கிற்று. வடுப்பட்ட தமிழ் வடுகு. தெலுங்கு என்ற பெயர் மிகப் பிந்தினது. வடுகு முதலாவது கொடுந்தமிழாயிருந்து பின்பு(கி.மு. 3000) கிளைமொழியாய்ப் பிரிந்துவிட்டது. ஆரியர் இந்தியாவுக்கு வரும்போது அநாகரிகரா யிருந்தனர்.

"ஆரியர் மிலேச்சர்" என்பது திவாகரம்.

சமற்கிருதம் செருமானிய மொழியைச் சார்ந்ததென்று முன் கட்டுரையில் மொழிந்தாம். மேனாட்டு மொழிகட்கெல்லாம் உயிர்மெய் எழுத்துமுறை முதலியன இல்லாததுபோல வடமொழிக்கும் இல்லா திருந்தன. பின்பு தமிழைப் பின்பற்றியே அவை வடமொழிக்கு வகுக்கப் பட்டன. இதை 'வடமொழியும் தென்மொழியும்' என்னுமோர் கட்டுரையில் விரிவாய் விளக்குவாம்.

ஆரியர் இந்தியாவிற்கு வந்தபின், வடநாட்டில் வழங்கும் கொடுந் தமிழ்ச் சொற்கள் வடமொழியில் மிகுதியாய்க் கலந்தன. ஆரியர் ஆரிய