உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




74

பண்பாட்டுக் கட்டுரைகள்

மருதநிலத்தில் மக்கள் குடியேறி நிலையாய் வாழ்ந்து, சிற்றூர் பேரூராகி நாகரிக மிக்கபின், உழவர் வகுப்பினின்றே அந்தணரும் அரசரும் வணிகரும் பல்வகைத் தொழிலாளரும் தோன்றினர். முதன்முதல் தமிழ்நாட்டில் அந்தணரென்றது, அறிவுமிக்கு உலகவாழ்வை வெறுத்து வீட்டுநெறியில் நின்ற துறவிகளை.

66

'அந்தண ரென்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்”

என்று திருக்குறளில் நீத்தார் பெருமையிற் கூறியது காண்க.

(குறள்.30)

அரசர் என்றது, வீரமும் நடுவுநிலையும் அறிவுஞ் சிறந்து அரசராய் நியமிக்கப்பட்டாரையும் அவர் குடும்பத்தினரையும். தமிழ்நாட்டில் அந்தணர், அரசர் என்னும் பகுப்பு, நிலையும் பதவியும் பற்றியதேயன்றி, பிராமணர், க்ஷத்திரியர் என்னும் ஆரியப் பகுப்புப் போலக் குலம் பற்றிய தன்று. ஆரியப் பிராமணர் சிறிது தொழிலொப்புமை பற்றியே பிற்காலத்தில் னவிலக்கண(உபலக்ஷண)மாய் அந்தண ரெனப்பட்டனர்.

தமிழ்நாட்டில் (பிராமணரல்லாத) தமிழரெல்லாரும் ஒரு வகுப் பினின்று தோன்றினமை பற்றியே, 'வெள்ளாண் மரபுக்கு வேதம்' என நாலடியார்ச் சிறப்புப் பாயிரச் செய்யுளொன்று தமிழரெல்லாரையும் வெள்ளாண் மரபில் அடக்கிக் கூறுகின்றது. இனி, தலைமைபற்றி எனினுமாம்.

அந்தணர் அரசர் முதலாய நால்வகைக் குலங்களுந் தோன்றியபின், அவற்றின் பெயர் வரிசையிற் கடையிற் கூறப்படுவதுபற்றி, உழவர் கடைய ரென்றும் பின்னோரென்றுங் கூறப்பட்டனர். கடையர் என்பது பின்பு உழுதுண்பார்க்கே வழங்கி வந்தது.

பலவகைத் தொழிலாளருள், உழவரே தொழிலும் தன்மையும்பற்றிச் சிறந்த பிள்ளைகளாய்(மக்களாய்) இருந்தமையின் பிள்ளைமார் என்றும், சிறந்த வினை செய்தமையின் வினைஞரென்றும், பிறர்க்கு வேளாண்மை (உபசாரம்) செய்தமையின் வேளாளரென்றும் கூறப்பட்டனர். பிள்ளை என்பது மக்களொருமைப் பொதுப்பெயராதலை, 'என்ன பிள்ளை!', 'மறப்பிள்ளை',

ண்பிள்ளை' என்னும் உலக வழக்குகளால் உணர்க. உழவு சிறந்த வினையாதலின், திருவள்ளுவர் உழவரைக் “கைசெய்தூண் மாலை யவர்” (குறள். 1035) என்றார். கை, செய்கை. வேளாளர் என்னும் பெயர் வேள் ஆளர் என்னும் இருசொல்லாய்ப் பிரிந்து, பிறரை விரும்பி உபசரிக்கும் மக்கள் எனப் பொருள்படுவதாகும். வேட்டல் விரும்பல். வேளாளரின் தன்மை வேளாண்மை. "வேளாளன் என்பான் விருந்திருக்க வுண்ணாதான்" என்றார் நல்லாதனார்.

“காப்பாரே வேளாளர் காண்” என்றார் கம்பர். வேளாண்மை என்னுஞ் சொல் ஆகுபெயராய் வேளாளர் தொழிலாகிய பயிர்த் தொழிலையுங்