உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வேளாளர் பெயர்கள்

75

குறிக்கும். வெள்ளாண்மை, வெள்ளாமை என்பனவும் இங்ஙனமே. வெள்ளாளரின் தொழில் வெள்ளாண்மை. இச் சொல்லின் திரிபு வெள்ளாமை.

வெள்ளாளன், வேளாளன் என்னும் பெயர்கட்கு மூலத்தில் யாதோர் இயைபுமின்று. வெள்ளாளன் என்னும் பெயர் வெள்ளாட்டி, வெள்ளாடிச்சி என்றும், வேளாளன் என்னும் பெயர் வேளாட்டி, வேளாட்டிச்சி என்றும் பெண்பால் கொள்ளும். அரசர் மனைகளிலும் பெருமக்கள் வீடுகளிலும், துப்புரவும் ஒழுக்கமும்பற்றிச் சில வேளாள வகுப்புப் பெண்கள் வேலைக்கு நியமிக்கப்பட்டமையின், வெள்ளாட்டி, வேளாட்டி என்னும் பெயர்கள் பணிப்பெண் எனவும் பொருள்படத் தலைப்பட்டன. கம்பர் வீட்டு வெள்ளாட்டி என்னுந் தொடரைக் காண்க. பண்டைத் தமிழரசர் போரிற் சிறைபிடித்த பகையரசர் மகளிரை விட்டுவைத்த சிறைக் களத்திற்குப் பணிப் பெண்களிருக்குமிடம் என்னும் பொருளிலேயே வேளம் எனப் பெய

ரிட்டனர்.

உழவுக்கு எருதுகள் வேண்டியிருத்தலின், அதன்பொருட்டுச் சிறுபான்மை ஆநிரைகளைத் தொழுவங்களிற் காத்தமைபற்றி உழவர்க்குத் தொழுவர் என்னும் பெயரும் உண்டாவதாயிற்று.

உழவர் உழவுத்தொழிலாலும் அரசர்க்கு அவ்வப்போது நிகழ்த்திய போர்த்தொழிலாலும் வலிமையும் வீரமும் பெற்றிருந்தமையின் மள்ளர் என்றுங் கூறப்பட்டார். மள்ளர் வீரர். மல்லர் என்பது மள்ளர் எனத் திரிந்தது. மல் என்பது வலிமை அல்லது போர். "மல்லல் வளனே" என்றார் தொல் காப்பியர். வளன் என்றது வலிமை மிகுதியை.

66

வேளாளர்க்கு உழவு, போர் என்னும் இருதொழிலு மிருந்தமை,

"வேளாண் மாந்தர்க் குழுதூ ணல்ல

தில்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி

“வேந்துவிடு தொழிலிற் படையுங் கண்ணியும்

வாய்ந்தன ரென்ப அவர்பெறும் பொருளே '

""

என்னும் தொல்காப்பிய மரபியற் சூத்திரங்களா னறியப்படும்.

(தொல். மரபு. 82)

(தொல். மரபு. 83)

மள்ளர் என்னும் பெயர், 'களம்புகு மள்ளர்' (கலித். 106), 'பொரு விறன் மள்ள’(முருகாற்றுப்படை) என்னுமிடத்து வீரரையும், 'மள்ள ருழுபக டுரப்புவார்' (கம்பரா. நாட். 18) என்னுமிடத்து உழவரையுங் குறித்தது. உழுவித்துண்ணும் வேளாளருட் சிலர் முற்காலத்தில் மிக உயர்நிலையி லிருந்தனர். அவருள் ஓர் ஊர் முழுதுமுடையவர் கிழார் என்றும், பல வூர்களையுடைய குறுநில மன்னர் வேளிர் என்றும் கூறப்பட்டார். சேவூர்க்கிழார் (சேக்கிழார்), கோவூர்க்கிழார், வேள்பாரி, வேள் ஆய் முதலிய பெயர்களை நோக்குக. கிழார் என்பது கிழவர் என்பதன் மரூஉ. கிழவர் தலைவர். கிழமை உரிமை. கிழவர் என்பது இக்காலத்தில் ஜமீன்தார் என்னும் பெயர்க்குச் சமமாகும். கிழான் என்னும் ஆண்பாற் பெயர் ஓர் ஊர்