உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வேளாளர் பெயர்கள்

77

திவாகரம், பிங்கலம் முதலிய நிகண்டுகளில் வேளாளரைச் சூத்திர ரெனத் திரிபுணர்ச்சியாற் கூறியது, ஆரியக் கொள்கைகள் தென்னாட்டில் வேரூன்றிய பிற்காலத்ததாகும். ஆரிய வருணப் பாகுபாடு வேறே, தமிழ் வருணப் பாகுபாடு வேறே. இவற்றைத் தொகையொப்புமைபற்றி ஒன்றெனக் கொள்வது திரிபுணர்ச்சியாகும். இதை அடுத்த கட்டுரையில் வெள்ளிடை விலங்கலாய் விளக்குதும்.

- "செந்தமிழ்ச் செல்வி" நளி 1937