உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




11

பாணர்

தமிழ்நாட்டில் உள்ள தமிழ் அல்லது திராவிடக் குலங்களுள் பாணர் குலமும் ஒன்று. இது மிகப் பழைமையான தென்பது தொல்காப்பியத்தா லறியப்படும்.

பாணர் பாணைத் தொழிலாகக் கொண்டவர். பாண் என்பது பாட்டு. பண், பாண், பாடு, பா என்பவை ஓரினச் சொற்கள். சீவகசிந்தாமணியில் பாணியாழ்(1500), பாண்வலை(2040), பாணுவண்டு(2447) என்னும் தொடர் மொழிகளில் பாண் என்னும் சொல் பாட்டு என்னும் பொருளில் வந்துள்ளது. சிலப்பதிகாரத்தும் (ப.349) பாண்-பாட்டு என்று அடியார்க்குநல்லார் கூறியுள்ளார்.

66

பாணருளும் இசைப்பாணரும் யாழ்ப்பாணரும் மண்டைப் பாணருமெனப் பலராம்" என்று (தொல். புறம். 36, உரை) நச்சினார்க்கினியர் கூறுவர். இசைக்கருவிகள்: தோற்கருவி, துளைக்கருவி, நரப்புக்கருவி, கஞ்சக்கருவி, மிடற்றுக் கருவி என ஐவகையாகக் கூறப்படும். இவற்றுள், மிடறு(தொண்டை) என்பது இயல்பான வாய்ப்பாட்டாதலின் இதனை நீக்கி ஏனைய நான்கையுமே கருவியெனக் கூறுவர் சிலர். இந் நான்கனுள் கஞ்சம் (வெண்கலம்) தாளக்கருவி. இது முதலிற் கருவிபற்றி வெண்கலத்தாற் செய்யப்பட்டதையும், பின்பு இனவிலக்கணத்தாற் பிறவற்றினால் செய்யப்பட்டவற்றையும் குறிக்கும். தாளக் கருவியின்றியும் தாளம் காக்கப் படுமாதலானும், ஒரு தாளக் கருவியும் தனித்து இன்பம் தாராமையானும் அது முக்கியமானதன்று. மேற்கூறிய பிரிவாருள் இசைப்பாணர் வாய்ப் பாடகரும், யாழ்ப்பாணர் நரப்புக்கருவியினரும், மண்டைப்பாணர் தோற்கருவியினருமாவர். துளைக்கருவி இயக்கும் குழற்பாணர் மண்டைப் பாணருள் அடங்குவர். மண்டை-பறை. குழலொடுகூடிப் பறையடிப்பதே பெருவழக்கு. இனி, நச்சினார்க்கினியர் பாணரை மூவகையர் என்னாது பலர் என்றதால், அதனுட் குழற்பாணரை அடக்கினும் அமையும். சிலப்பதி காரத்தில்,

"குழலினும் யாழினுங் குரல்முத லேழும் வழுவின் றிசைத்து வழித்திறங் காட்டும் அரும்பெறன் மரபிற் பெரும்பா ணிருக்கையும்” என்று இளங்கோவடிகளும்,

(இந்திரவிழா 35-8)