உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாணர்

79

'பெரும் பாண்-குழலர் முதலோர்' (ப. 139) என அரும்பதவுரை காரரும் கூறியிருப்பதால் குழற்பாணருமிருந்தனரென அறிக. குழலைப் பறையின்றித் தனித்து வாசிப்பதின்மையின், குழற்பாணர் பிரித்துக் கூறப்பட்டிலர்.

ஆகவே, இசைத்தொழில் முழுமையுங்கொண்டு இக்காலத்து மேளக் காரர்போல இருந்தவர் பாணர் என்பது பெறப்படும். "பாண்சேரிப் பற்கிளக்கு மாறு" என்னும் பண்டைப் பழமொழியும் இதனை வற்புறுத்தும். திருவிளை யாடற் புராணத்திற் பாண்டியன் இசைப்புலவராகக் கூறப்படும் பாண பத்திரரும், திருஞானசம்பந்தர் தேவாரப் பதிகங்கட்கு யாழ் வாசித்த திருநீலகண்ட யாழ்ப்பாணரும், பன்னீராழ்வாருள் ஒருவரும் யாழறிஞரு மான திருப்பாணாழ்வாரும் பாணர் குலத்தவரே. பாணருள், ஆடவன் (புருஷன்) பாணன் என்றும், பெண்டு பாடினி, பாணிச்சி, பாட்டி, விறலி என்றுங் கூறப்படுவர்.

வேளாளர் குலம் வேளாண் என்றும், சமணர் நெறி சமண் என்றும் கூறப்படுதல் போல, பாணர் குலமும் பாண் என்று கூறப்படுவதுண்டு. புறப்பொருள் வெண்பா மாலையில்,

“கிளை பாய்ந்து பண்ணிய கேள்வியாழ்ப் பாணும்”

66

'அங்கட் கிணையன் துடியன் விறலிபாண்”

66

பாண்பாட்டு”

'பாண்கட னிறுக்கும்”

என வந்திருத்தல் காண்க.

(சூ144)

(சூ.16)

(சூ.137)

(புறம்.203)

பாணருக்குச் சென்னியர், வயிரியர், செயிரியர், மதங்கர், இசைகாரர், பண்ணவர், பண்டவர்(பண்டர்), ஓவர், அம்பணவர் முதலிய பிற பெயர்களு முண்டு. இவற்றுள் பண்டர், ஓவர் என்பன பாணருட் கீழ்மக்களைக் குறிக்குமென்று பிங்கல நிகண்டு கூறும். மதங்கன், அம்பணவன் என்னும் ஆண்பாற் பெயர்கட்கு மதங்கி, அம்பணத்தி என்பன முறையே பெண்பாற் பெயர்களாகும். அம்பணம் யாழ். அம்பணவன் யாழ் வாசிப்போன்.

66

'அரும்பெறன் மரபிற் பெரும்பா ணிருக்கையும்" என்று சிலப்பதி காரத்தும், "பெரும்பாணிருக்கையும்" என்று மதுரைக்காஞ்சியினும் (942), "அருட்பெரும் பாணனாரை" என்று திருநீலகண்ட யாழ்ப்பாணர் புராணத்தும்(3), சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை எனப் பத்துப்பாட்டினும் வந்திருப்பது கொண்டு, சிறுபாணர் பெரும்பாணர் எனப் பாணர் இருபெரும் பிரிவினரோ என்று ஐயுறவும் இடமுண்டு.

பத்துப்பாட்டு முகவுரையில், “மேலைப்பாட்டும் (சிறுபாணாற்றுப் படையும்) இதுவும்(பெரும்பாணாற்றுப்படையும்) பாணராற்றுப்படையா யிருப்பினும், அடிவரையறையிற் சிறிதும் பெரிதுமாயிருத்தல்பற்றி அது