உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




80

பண்பாட்டுக் கட்டுரைகள் சிறுபாணாற்றுப்படை யெனவும் இது பெரும்பாணாற்றுப்படை யெனவும் பெயர் பெற்றன" என டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்கள், எழுதி யிருப்பது தெளிவானதேயாயினும், பெரும்பாண், பெரும்பாணர் என்று நூல்களில் வழங்குவதானும், சிறுபாணாற்றுப்படையில்,

"பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின் இன்குரற் சீறியாழ் இடவயின் தழீஇ"

எனச் சுருக்கமாகவும் சீறியாழ் (சிறு

+

யாழ்) என்னும் பெயருடனும், பெரும்பாணாற்றுப்படையில் பச்சை, துளை, போர்வை, வாய், கவைக்கடை, திவவு, மருப்பு, நரம்பு முதலிய உறுப்புகளையுடையதாக விரிவாகப் பதினாறடிகளினும் யாழ் கூறப்படுதலானும், சிறுபாண் பெரும்பாண் என்பவை கருவிபற்றிய குலப்பிரிவோ என்னும் ஐயம் முற்றும் அகன்றபா டில்லை. சென்னைப் பல்கலைக்கழக அகராதியினும் பெரும்பாணர் பாணருள் ஒரு பிரிவினர் எனக் குறிக்கப்பட்டுள்ளது.

,

பாணர் வாய்ப்பாட்டும் கருவியுமாகிய இருவகை இசையினும் வல்லவராயிருந்தனர். சிலப்பதிகாரத்திலுள்ள 'பாடற் பாணர்' (அந்தி. 186), 'குரல்வாய்ப் பாணர்' (200) என்னுந் தொடர்கள் வாய்ப் பாடகரைக் குறிக்கும். கருவிகளில் தோற்கருவிகளெல்லாம் பறை என்னும் பொதுப் பெயராற் குறிக்கப்படும். தொல்காப்பியத்தில்,

"தெய்வம் உணாவே மாமரம் புட் பறை'

என்னும் கருப்பொருட் சூத்திரத்துள்ளும்,

66

""

'அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு

நல்ல படாஅ பறை

(தொல். )

(குறள். 1115)

என்னும் திருக்குறளினும் பறை என்பது தோற்கருவிப் பொதுப் பெயராயுள்ளமை காண்க. 'மணப்பறை', 'பிணப்பறை', 'பறைசாற்றினான்' முதலிய வழக்குகளில் பறை என்பது பல்வேறு தோற்கருவிகளைக் குறித்தது. பறைகளை அடிப்பவர் பறையர் எனப்பட்டனர். இப் பெயர் இக்காலத்துப் பிணப்பறை யறைபவரை மட்டுங் குறிக்கின்றது. பண்டைக் காலத்தில் மண்டை என்னும் பெயர் பறைக்கு வழங்கிவந்த மறுபெயராகும். பறைகளடிக்கும் பாணர் மண்டைப்பாணர் எனப்பட்டனர். மண்டையோடு போன்று மண், மரம், பித்தளை முதலியவற்றாற் செய்து தோற்கட்டிய பறைகளை மண்டை யென்றது ஒருவகை உவமையாகு பெயர். மண்டை யென்பது இக்காலத்தில் மொந்தையென்று திரிந்து அவ் வடிவாயுள்ள மட்கலயத்தைக் குறிக்கின்றது. தவலை என்பதன் மறுவடிவாகிய தபேலா என்னும் இந்துத்தானிச் சொல் ஒரு நீர்ப்பாத்திரத்தையும் ஒரு பறையையும் குறித்தல் காண்க. கோவில் மேளத்தைக் குறிக்கும் தவல்(தவுல்) என்னும் பெயரும் இதன் திரிபுபோலும்.